தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தவளைகளுக்கு ஆபத்து!

தவளைகளுக்கு ஆபத்து!

தவளைகளுக்கு ஆபத்து!


PUBLISHED ON : அக் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழைபெய்ய வேண்டிய காலத்தில் பெய்வதில்லை; வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலகின் எல்லா நாடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு. மழையை நம்பி வாழும் உயிரினங்களுள் தவளைகள் முக்கியமானது. பருவமழை தவறிவிட்டால், அதன் வாழ்விடமும் இனப்பெருக்கமும் சிக்கலாகிறது.

இந்தியாவில் மொத்தம் 13 தவளை இனங்கள் உள்ளன. அதில் பெரும்பாலான இனங்கள் மத்திய இந்தியப் பகுதிகளில் காணப்படுகின்றன. சூழலியலில் ஏற்படும் மாற்றங்களைச் சமாளித்து அவற்றால் வாழ முடியவில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தவளைகளின் குடம்பி (Larva) என்று சொல்லப்படும் தலைப்பிரட்டை நீரில் மட்டுமே வாழ முடியும். தவளைகளின் முட்டைகள் பொரிந்து வரும்போது, மழைபெய்யாமல் வறட்சி நீடித்தால், அதன் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கும். தவளைக் குட்டியின் தோல் பகுதி வளரக்கூடிய பருவத்தில், தண்ணீரில்தான் பாதுகாப்புக் கிடைக்கும். தண்ணீர் இல்லாத காலகட்டத்தில், எளிதில் வைரஸ் தொற்று, நச்சுகள் தவளைகளைத் தாக்கும். இதனால், தவளைகள் அழிந்து வருகின்றன.

இந்த வகைத் தொற்றால் அமெரிக்காவில் வெப்பமண்டலப் பகுதிகளில் இருந்த தவளைகள் அழிந்துவிட்டன. இப்போது இந்தியாவில் இந்தப் பிரச்னை ஆரம்பித்துள்ளது. உலகில் நடந்த பருவநிலை மாற்றங்களைச் சமாளித்து, ஈடுகொடுத்து உயிர் வாழ்ந்த தவளைகளால், இப்போது அதிகரித்துவரும் வெப்பத்தைச் சமாளிக்க முடியவில்லை. தண்ணீர் மாசும் மிகப்பெரிய சவால். ஈரப்பதமான தோலில் ரசாயன நச்சுகள் ஒட்டிக்கொள்கின்றன. இதனால், அதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியையும் தடுத்து, இனப்பெருக்கத்தையும் பாதிக்கிறது.

தவளைகளைக் காப்பாற்ற என்ன செய்யவேண்டும்?

* நீர்நிலைகளில் சோப் நுரைகள், பூச்சிக்கொல்லிகள், ரசாயனங்கள் கொட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.

* மழைக்காலத்தில் தண்ணீர் ஓடும் பாதையில் கற்கள், மண், தோட்டத்திலிருந்து வரும் குப்பைகளைப் போட்டு அடைக்காமல் இருக்கவேண்டும்.

* தவளைகள் வாழும் நீர்நிலைகளைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்.

தவளைகள் ஏன் முக்கியம்?

* தவளைகள், கொசுக்களை உண்ணும். குரங்குகள் முதல் மனிதர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்தும் கொசுக்கள், தவளைகளின் முக்கிய உணவுகளுள் ஒன்று. கொசுக்கள் பெருக்கத்தைக் குறைக்க தவளைகள் உதவுகின்றன.

* வளர்ந்த தவளைகள் பூச்சிகளை உண்ணும். மனிதர்களைத் தாக்கும் பூச்சிகளைத் தின்பதால், பூச்சிகள் மூலம் வரும் நோய்கள் வருவதில்லை.

* நீரில் வாழும் தவளைகள், தலைப்பிரட்டைகள் நீரைச் சுத்திகரிப்பு செய்யும். நீருக்குள் இருக்கும் பாசிகளை உண்ணும். அதனால் நாம் குடிக்கப் பயன்படும் நன்னீர் இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us