தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை

பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை

பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை


PUBLISHED ON : அக் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போதைய அளவிலேயே பிளாஸ்டிக் குப்பைகள் தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டுக்குள், பெருங்கடல்களில் (Ocean) மீன்களைவிட பிளாஸ்டிக் குப்பைகள்தான் அதிகம் இருக்கும் என, சூழலியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவைச் சுற்றியுள்ள கடல்பரப்பு அனைத்துமே மாசடைந்து வருகிறது. எனவே, பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறைக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இதன் ஒரு பகுதியாகவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்குக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரச்னையின் தீவிரம்

ஓராண்டில், ஐரோப்பாவிலுள்ள கடற்பரப்புகளில் மட்டும் 1.50 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்படுகின்றன. அப்படியெனில், மற்ற கடல்பகுதிகளையும் சேர்த்து பிளாஸ்டிக் குப்பைகளின் அளவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். நிலத்தைப் போலவே, நீரிலும் பிளாஸ்டிக் குப்பைகள் மட்குவதில்லை.

பிளாஸ்டிக் குப்பைகளை உணவாக நினைத்து, பல கடல்வாழ் உயிரினங்கள் அவற்றை உண்கின்றன. மீன்கள், ஆமைகள், திமிங்கிலங்கள், டால்ஃபின்கள் என, கடலில் இருக்கும் எண்ணற்ற உயிரினங்கள், பிளாஸ்டிக் குப்பைகளை உண்கின்றன.

பிளாஸ்டிக் குப்பைகளை உண்ணப் பழகிவிட்ட திமிங்கிலங்கள், அவற்றின் வழக்கமான உணவுமுறையை மறந்துவிட்டன. பிளாஸ்டிக் குப்பைகள் செரிக்காததால், கடல்வாழ் உயிரினங்கள் இறந்துவிடுகின்றன.

தடை விதித்துள்ள நாடுகள்

ருவாண்டா, பிரான்ஸ், சுவீடன், அயர்லாந்து, சீனா போன்ற நாடுகளில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அல்லது மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்குள், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பெருமளவு குறைக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

அழிவில்லா அரக்கன்

பிளாஸ்டிக் பொருட்கள் மட்குவதற்கு 500 முதல் 1,000 ஆண்டுகள் வரை ஆகும். ஆகவே, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்துப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிக அவசியம்.

இந்திய மாநிலங்களில் தடை

1. ஒடிசா-: சிலிக்கா (Chilika) ஏரி அருகே, பிளாஸ்டிக் பைகளை விற்கவும் பயன்படுத்தவும் தடை.

2. மேற்கு வங்கம்: -வழிபாட்டுத் தலங்கள். புராதன இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளன.

3. குஜராத்: காந்திநகர் பகுதியில் முழு தடை.

4. கோவா: பிளாஸ்டிக் பைகள், ஸ்பூன்கள், தட்டுகள் பிற பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தல், சேகரித்து வைத்தல், மறுசுழற்சி செய்தல், விற்பனை செய்தலுக்குத் தற்காலிகத் தடை.

5. கேரளம்: திருவனந்தபுரம், கோட்டயம், கண்ணூர் பகுதிகளில், சபரிமலை யாத்திரையின்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழு தடை.

6. மகாராஷ்டிரம்: மும்பையில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளிலும் குறிப்பிட்ட வீதத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

7. தமிழகம்: 2019 ஜனவரியிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடையிலிருந்து விலக்களிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியல், விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us