தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கண்ணியம் போற்றும் கழிப்பறை தானம்!

கண்ணியம் போற்றும் கழிப்பறை தானம்!

கண்ணியம் போற்றும் கழிப்பறை தானம்!


PUBLISHED ON : ஆக 06, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“ஒரு நாள், நாங்கள் திருச்சி-யில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்தோம். வழியில் சுகாதாரமான கழிப்பறையைத் தேடினோம். கண்டுபிடிக்கவே முடியவில்லை. குறிப்பாக, ஒரு பெண்ணான எனக்கு, இது கசப்பான அனுபவம். ரொம்ப வருத்தம். அப்போது எனது தாத்தா, “ஒருநாள் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாததால், இவ்வளவு சிரமப்படுகிறாயே, பல கிராமங்களில் கழிப்பறையே இல்லாமல் இருக்கிறார்களே? அவர்களின் நிலை என்ன?” என்று என்னைக் கேட்டார். ''திறந்தவெளிக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துவதில் இளம்பெண்களுக்கு இருக்கும் அசௌகரியங்களை யோசித்துப் பார்த்தேன்.

அவர்களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுத்தால் என்ன என்ற எண்ணம் பிறந்தது” என்று சொல்லும் அக்-ஷயா, 2016இல் தனது 13வது பிறந்த நாளுக்காக தந்தையிடம் கேட்ட அன்பளிப்புதான், ஏழை மாணவி ஒருவருக்கு கழிப்பறை தானம். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏழைக்குடும்பம் ஒன்றுக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டது.

“என்னை முன்பின் பார்த்திராத ஆர்த்தி என்ற அந்தத் தோழி, கழிப்பறை கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சிடைந்தாள். அவர்கள் வீட்டில், அவளோடு சேர்த்து ஐந்து பெண் பிள்ளைகள். இயற்கை உந்துதலுக்காக வயல்வெளிக்கு இனி ஓடவேண்டிய அவசியம் இல்லை என்ற நிம்மதி அவரிடம் தெரிந்தது.

அந்தக் குறிப்பிட்ட பிறந்த நாள் கொண்டாட்டம் எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது. அப்போதுதான், இதுபோல் நூறு கழிப்பறைகளைக் கட்டித்தர வேண்டும் என்று இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியானதும், பலரும் எங்களைத் தொடர்புகொண்டு, தாங்களும் உதவ விரும்புவதாகக் கூறினர். சஃபானா என்ற எனது துபாய் தோழி, என்னைப் போலவே, அவள் பிறந்த நாளன்று, இரண்டு கழிப்பறைகளைத் தானம் கொடுத்துக் கொண்டாடினாள். ஒவ்வொரு மாணவிக்கும் ஒரு கழிப்பறை கிடைக்கும்போது, பாதுகாப்பு மேம்படும்.” என்கிறார் அக்-ஷயா.

அக்-ஷயா கழிப்பறைக் கட்டிக்கொடுக்க தேர்ந்தெடுத்த பகுதி கடலூர் மாவட்டம். தண்ணீர் தட்டுப்பாடுள்ள இம்மாவட்டத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பறையையே இவர் கட்டிக் கொடுக்கிறார். இதற்கு எகோசான் கழிப்பறை (EcoSan toilet) என்று பெயர். மணலையும் கரியையும் பயன்படுத்தும் கழிப்பறைகள் இவை. இந்த வகைக் கழிப்பறைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. குறைவான நீர் இருந்தாலே போதும்.

“கடந்த ஜூலை 22ஆம் தேதியன்று, 15வது கழிப்பறையைக் கட்டிக் கொடுத்துள்ளோம். இவர்களைப் போன்று ஏராளமானவர்கள் ஒத்துழைப்பில் 100 கழிப்பறைகள் என்ற இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.” என்று கூறுகிறார் அக்-ஷயா.

தொடர்புக்கு: teenclean2106@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us