PUBLISHED ON : ஜூலை 30, 2018

ஐரோப்பிய ஒன்றியம், செவ்வாய் கிரகத்திற்கு 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற விண்கலத்தை அனுப்பி இருந்தது. அது அங்கிருந்து எடுத்து அனுப்பிய புகைப்படங்களை ஆய்வுசெய்த இத்தாலிய விஞ்ஞானிகள், செவ்வாயின் கிழக்குப் பகுதியில் ஏரி போன்ற அமைப்பு தெரிவதாகவும். பனிப் படலம் உள்ளதாகவும் கூறியுள்ளனர். அந்தப் பனிப்படலத்தில் மெக்னீசியம், கால்சியம், சோடியம் போன்றவையும் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வேற்று கிரகங்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறிய உலக அளவில் வானியல் விஞ்ஞானிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே, செவ்வாயில் நீர் வழித்தடம் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அங்கு நீர் இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, செவ்வாயில் மனிதன் குடியேறும் நாள் நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
