PUBLISHED ON : மே 13, 2019

அன்றாடம் நிறைய இடங்களில் நாம் கடந்துபோகக்கூடிய விஷயங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த இலச்சினைகள் (symbols). அப்படி நாம் அடிக்கடி பார்த்துப் பழகிய இலச்சினைகளுக்கான பொருள் எல்லோருக்கும் தெரியுமா? என்பது சந்தேகமே! அதனாலேயே சிலவற்றின் பொருளை இங்கே கொடுத்துள்ளோம். இன்னும் ஏராளமான இலச்சினைகள் உள்ளன. அவற்றிற்கான விளக்கத்தை நீங்களே தேடிக் கண்டுபிடியுங்களேன்.
பொருட்கள்
* பாதுகாப்பாகக் கையாளவும்
* உள்ளிருக்கும் பொருள் எளிதில் உடையக்கூடியது
* இந்தப் பக்கம் மேலே வரவேண்டும்
* இப்பொருள் இருக்கவேண்டிய தட்பவெட்ப அளவு
* பொருள் தண்ணீரில் நனையாமல் பார்த்துக்கொள்
* குறிப்பிட்ட காலம் வரை இப்பொருளைப் பயன்படுத்தலாம்
மறுசுழற்சி
* மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய அலுமினியம்
* மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கண்ணாடி
* மின்னணுப் பொருட்கள் உள்ளன
* மறுசுழற்சிக்கான சர்வதேச இலச்சினை
* பொருளைச் சரியான முறையில் அகற்றவும்
* சூற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தயாரிப்பவர்கள்