தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'வெருகு' தெரியுமா?

'வெருகு' தெரியுமா?

'வெருகு' தெரியுமா?


PUBLISHED ON : செப் 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்டுப்பூனை

ஜங்கிள் கேட்பெலிஸ் சாஸ் (Jungle catFelis chaus)

காணப்படும் இடங்கள்: பரந்த புல்வெளிகள், புதர்க் காடுகள்

அளவு: உயரம்: 2 அடி

எடை: 5 முதல் 6 கிலோ வரை

உணவு: சிறிய பாலூட்டிகள், பறவைகள்

இரவாடிகளான காட்டுப் பூனைகளைக் கிராமப்புறங்களில் எளிதில் காணலாம். நீண்ட காலும், குட்டையான வாலும் கொண்டது. உடல் மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்கள் வெண்மை கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். இதன் பின்னங்கால்களில் உள்ள சிறு பட்டைகள் இதைத் தனித்து அடையாளம் காட்டும். காதுகள் மேல்நோக்கி விரைப்பாகக் காணப்படும்.

உலகம் முழுவதும் 36 வகையான காட்டுப்பூனைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 15 வகைகள் காணப்படுகின்றன. அதில், தமிழகத்தில் மட்டுமே 4 வகை காட்டுப்பூனைகளைக் காணலாம். சிறுத்தைப் பூனை, மீன்பிடிப் பூனை, சாம்பல் தோல் பூனை இவை அனைத்தும் காட்டுப்பூனை இனத்தைச் சேர்ந்தவை.

நம்முடைய சங்க இலக்கியங்களில் காட்டுப்பூனை பற்றிய பாடல் குறிப்புகள் ஏராளமாக உள்ளன. வெருகு என்ற பெயரில் அகநானூறு, குறுந்தொகை ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் காட்டுப்பூனைகள் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

- ஏ.ஷண்முகானந்தம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us