தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பரீட்சைக்குப் போகல

பரீட்சைக்குப் போகல

பரீட்சைக்குப் போகல


PUBLISHED ON : செப் 05, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான்காம் வகுப்பு அரையாண்டுத் தேர்வின்போது ஒரு நாள் தாத்தா என்னைச் சந்தைக்கு கூட்டி சென்றுவிட்டார். தலையில் வெண்டைக்காய் கூடையை சுமந்து கொண்டுபோய் சந்தையில் போட்டுவிட்டு, தாத்தா வாங்கிக்கொடுத்த நொறுக்குத் தீனியைத் தின்றபடி மாலையில் வீடு வந்து சேர்ந்தேன்.

முதல்நாள் நான் வராததன் காரணத்தைக் ராமலிங்கம் சார், கேட்டார். விவரத்தைச் சொன்னேன். 'பரீட்சைக்கு வராம போறது ரொம்ப தப்பு. இனிமேல் இப்படி செய்யாதே' என்றார். அமைதியாகப் பேசுவதுதான் அவரது இயல்பு. அத்துடன், 'உனக்கு நான் பிரசண்ட் போட்டு, வரலாற்றில் 98 மார்க், புவியியலில் 95 மார்க் எடுத்த மாதிரி போட்டிருக்கேன்' என்றும் சொன்னார்.

அதே பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பிற்கு புஷ்பநாதன் என்பவர் எனக்கு ஆசிரியர். மூங்கில் கொம்பை எடுத்து எங்களை அடிப்பதுதான் அவர் வழக்கம். ஆங்கிலப் பாடத்தில் கட்டுரை ஒன்றை எழுதச் சொன்னார். தப்புத் தப்பாய் எழுதினேன். கொம்பை எடுத்து விளாச ஆரம்பித்துவிட்டார். புஷ்பநாதன் சார் போன பிறகு என்னிடம் வந்து, 'அழாதே. அவர் குணம் அப்படி. இதுக்கெல்லாம் பயந்து நீ பள்ளிக்கூடத்துக்கு வராமல் போகாதே' என்றார். அடிக்கு பயந்து என் தங்கை பள்ளிக்கு வராமல் போய்விட்டதுதான் அவர் அப்படிச் சொல்லக் காரணம்.

கதை சொன்ன, பேச்சு, கட்டுரைப்போட்டிகளுக்கு எழுதிக்கொடுத்த, கவிதைப் புத்தகங்கள் கொடுத்து வாசிக்கச் சொன்ன ஆசிரியர்கள் பலர் நினைவில் இருந்தாலும், நான் அடி தாங்காமல் அழுதபோது ஆறுதல் சொன்ன ராமலிங்கம் சார் எனக்கு ஸ்பெஷல்தான்.



- இ.எஸ்.லலிதாமதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us