உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 26, 2016

அ நிறம் | அளவு
ஆந்திராவில் சாலை விபத்துகளை 15 சதவீதம் குறைக்க, அந்த மாநில அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் அக்டோபர் 1 முதல், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அனைவரும், கட்டாயம் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும். ஹெல்மெட் அணியாமல் மூன்று முறைக்கு மேல் பிடிபட்டாலோ, மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆந்திர போக்குவரத்து துறை அமைச்சர் ராகவ ராவ் கூறியுள்ளார்.
