உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 26, 2016

அ நிறம் | அளவு
பட்ஜெட் என்பதை நிதியறிக்கை என்று தமிழில் சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட காலங்களுக்குள் செயல் படுத்தப்படவேண்டிய திட்டங்களுக்கான வரவு, செலவுகளை ஒழுங்குபடுத்திக்கொள்ள திட்டமிடுதலை நிதியறிக்கை மசோதா என்கிறார்கள். மத்திய அரசு ஆண்டுக்கொருமுறை இரண்டு பட்ஜெட் கூட்டத்தொடரினை நடத்தும். ஒன்று ரயில்வே நிதியறிக்கை மசோதா, மற்றொன்று பொது நிதியறிக்கை மசோதா. இனி இப்படி தனித்தனியாக நிதியறிக்கை கூட்டத்தொடர் நடக்காது. ஒரே நிதியறிக்கை மசோதாவாக தாக்கல் செய்யலாம் என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. 1924ல் இருந்து ரயில்வே நிதியறிக்கை தனியாக சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. 92 ஆண்டு கால வழக்கம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
