உள்ளடக்கத்திற்கு செல்ல
நாட்டின் பாதிக்கு மேற்பட்ட பகுதிகள் பூகம்ப அபாய பகுதிகள்
நாட்டின் பாதிக்கு மேற்பட்ட பகுதிகள் பூகம்ப அபாய பகுதிகள்
PUBLISHED ON : செப் 26, 2016
அ நிறம் | அளவு
தேசிய பேரிடர் மேலாண்மைக் கழகமும், கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி கவுன்சிலும் (Building Materials and Technology Promotion Council) இணைந்து, இந்தியாவின் பூகம்ப பகுதி வரைபடத்தை வெளியிட்டுள்ளன. அதில் இருந்து, இந்தியாவின் 59 சதவீத நிலப்பரப்பு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகள் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், தற்போது நாட்டில் உள்ள 30 கோடி வீடுகள் மற்றும் கட்டடங்களில், 95 சதவிகிதம் பூகம்பத்தைத் தாக்குப்பிடிக்க இயலாதவையாக இருக்கின்றன என்றும் இந்த நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
