தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/டக்வொர்த் - லூயிஸ் முறை

டக்வொர்த் - லூயிஸ் முறை

டக்வொர்த் - லூயிஸ் முறை


PUBLISHED ON : ஜூன் 24, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஃப்ராங்க் டக்வொர்த் (Frank Duckworth) மற்றும் டோனி லூயிஸ் (Tony Lewis) ஆகிய இருவரும் இணைந்து, நுட்பமாக உருவாக்கிய கணக்கீடுதான் டக்வொர்த் -லூயிஸ் (D / L) விதிமுறை. கிரிக்கெட் விளையாட்டில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த விதி, கணித சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. கிரிக்கெட் போட்டியின்போது வானிலை அல்லது பிற சூழ்நிலைகளால் ஆட்டம் தடைப்பட்டால், இரண்டாவதாக ஆடும் அணியின் இலக்கைக் கணக்கிட இந்த D / L முறை பயன்படுகிறது.

உதாரணம்:

50 ஓவர்கள் கொண்ட போட்டியை ஓர் அணி ஆடத் தொடங்கி, 40 ஓவர்களில் மழை குறுக்கிடுகிறது எனவும், அந்த அணியில் இன்னும் 7 விக்கெட்டுகள் இருக்கின்றன எனவும் வைத்துக் கொள்வோம்! மீதியிருக்கும் கடைசி பத்து ஓவர்களையும், அந்த அணி ஆடியிருந்தால் நிச்சயம் அவர்களால் 50க்கும் அதிக ரன்கள் எடுக்கும் வாய்ப்பு உண்டு. அவர்கள் ஆடத் தொடங்கும் போதும் 40வது ஓவரில் மழை வரும் என்று நினைத்து விளையாடி இருக்க மாட்டார்கள். ஆனால், இரண்டாவதாக விளையாடப் போகும் அணி 40 ஓவர்கள் என்று தெரிந்தே விளையாடுவார்கள். இதனால் எதிர் அணிக்கு அதிக ரன் இலக்கு வழங்கப்படும். இதுபோல் தடைப்பட்ட பல ஆட்டங்களின் போக்கைக் கருத்தில் கொண்டே 'டக்வொர்த் லூயிஸ்' முறையை உருவாக்கி இருக்கிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us