PUBLISHED ON : ஜூன் 24, 2019

ஜூன் 25, 1900 - மௌண்ட்பேட்டன் பிரபு பிறந்த நாள்
ஆங்கிலக் கடற்படைத் தளபதி; பிரிட்டன் இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதி. விடுதலை இந்தியாவின் முதலாவது ஆளுநராக இருந்தார். 'பர்மாவின் முதலாவது கோமகன்' என்றும் அழைக்கப்பட்டார்.
ஜூன் 27, 1964 - பி.டி.உஷா பிறந்த நாள்
இந்திய தடகள விளையாட்டு வீராங்கனை. 1985, 1986ஆம் ஆண்டுகளில் உலக தடகள விளையாட்டுகளில் முதல் பத்துப் பெண்களில் ஒருவராக விளங்கினார். 'இந்தியாவின் தங்க மங்கை' என வர்ணிக்கப்படுகிறார்.
ஜூன் 27, 1880 - ஹெலன் கெல்லர் பிறந்த நாள்
இளமையிலேயே பார்க்கும், கேட்கும், பேசும் திறன்களை இழந்திருந்தார். பிரெய்லி முறையில் கற்று, எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் மாறினார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பாடுபட்டார்.
ஜூன் 27, 1922 - அகிலன் பிறந்த நாள்
நாவல், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவர். மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்துள்ளார்.
ஜூன் 30, 1912 - மாதவையா கிருஷ்ணன் பிறந்த நாள்
வன உயிரி புகைப்படக் கலைஞர், இயற்கை ஆர்வலர். தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளின் முன்னோடி. காட்டுயிர்கள் பற்றி நேரடியான கள அனுபவங்கள், ஆய்வுகளை எழுதினார்.
ஜூன் 30, 1985 - மைக்கல் ஃபெல்ப்ஸ் பிறந்த நாள்
உலகின் தலைசிறந்த நீச்சல் வீரர். ஒலிம்பிக் வரலாற்றில் சாதனையாக 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். 'தங்க வேட்டை நாயகன்' என்றும் அழைக்கப்படுகிறார்.
