PUBLISHED ON : ஆக 22, 2016

வறண்ட நிலத்தில் அல்லது வெப்பமான நிலப்பகுதியில் மழை பெய்ததும், கொஞ்ச நேரத்தில் ஓர் அழகிய மணம் எழுவதை நாம் சுவாசித்திருப்போம். மழை நீரில் எதுவும் வாசனைத் திரவியம் எதுவும் கலந்து பெய்கிறதா?! நிலத்தில் 'ஸ்ட்ரெப்டோமைசிஸ்' (Streptomyces), 'ஆக்டினோமைசிஸ்' (Actinomyces) போன்ற எண்ணற்ற பாக்டீரியாக்களும் நுண்ணுயிரிகளும் உள்ளன. இவை வறண்ட நிலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஒரு கிராம் நிலத்தில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வறண்ட நிலத்தில் மழை பெய்த உடன் இந்த நுண்ணுயிரிகளில் இருந்து
'ஜியோஸ்மின்' (Geosmine), 'டைமிதைல் ப்ரோமியால்' (Dimethyl- bromial) போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதியியல் பொருட்கள் உருவாவதால் நிலத்தில் மழை பொழிந்தவுடன் மணம் கிளம்புகின்றது.
'மைகோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' (Mycobacterium tuberculosis) எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பதால் காசநோய் ஏற்படுகிறது. காசநோயை குணப்படுத்த உதவும் 'ஸ்ட்ரெப்டோமைசின்' (Streptomycin) என்ற மருந்து, 'ஸ்ட்ரெப்டோமைசிஸ்' (Streptomyces) பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
மழை பெய்தபின் மண்ணில் எழுகிற மணத்திற்கு ஆங்கிலத்தில் 'பெட்ரிசோர்' (Petrichor) என்று பெயர்.
