தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வானத்தில் அன்னப்பறவை!

வானத்தில் அன்னப்பறவை!

வானத்தில் அன்னப்பறவை!


PUBLISHED ON : ஆக 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விண்வெளியில் பல நட்சத்திரத் தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த நட்சத்திரக் கூட்டங்களை ஒன்றாகப் பார்ப்பது நமக்குப் பல உருவங்களை நினைவுபடுத்தும். நட்சத்திரப் புள்ளிகளை இணைத்து விதம் விதமாக உருவங்களைக் கற்பனை செய்து மகிழலாம். விண்வெளியின் வட பகுதியில் 88 நட்சத்திரத் தொகுதிகள் உள்ளன. அதில் ஒரு நட்சத்திரத் தொகுதி 'சிக்னஸ்' (Cygnus) எனப்படுகிறது. கிரேக்க மொழியில் 'சிக்னஸ்' என்றால் 'அன்னம்' எனப் பொருள். சிக்னஸில் உள்ள ஒன்பது நட்சத்திரங்கள் பார்க்க அன்னப் பறவை போன்ற அழகான தோற்றத்தைத் தருகிறது. சிக்னஸில் உள்ள மிகப் பிரகாசமான நட்சத்திரம் 'டெனெப்' (Deneb). இது சூரியனைவிட சுமார் 60,000 மடங்கு பிரகாசமானதாம்! 'சிக்னஸ்' நட்சத்திரத் தொகுதியின் நான்கு நட்சத்திரங்களை ஒன்றாகப் பார்க்கும்போது சிலுவை போலவும் தெரிவதால் இதை 'வட சிலுவை' (Northern Cross) எனவும் குறிப்பிடுகின்றனர். அடுத்தமுறை வானில் உள்ள நட்சத்திரங்களைப் பார்க்கிறபோது நீங்களும் என்ன மாதிரியான சித்திரங்கள் தெரிகிறது என்பதை அறிந்து மகிழுங்கள்!

* விண்வெளியில் சுமார் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன.

* இரவு வானில் கிட்டத்தட்ட 3000 நட்சத்திரங்களை வெறும் கண்களாலேயே நம்மால் பார்க்க முடியும்.

* பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன். அடுத்தபடியாக 'பிராக்ஸிமா சென்டாரி' (Proxima Centauri) என்ற நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் உள்ளது. பூமியிலிருந்து 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us