PUBLISHED ON : ஆக 08, 2016

அ நிறம் | அளவு
“மஹாராஷ்டிராவின் நெற்களஞ்சியமாக, பந்தாரா மாவட்டம் திகழ்கிறது. இங்கு, வைக்கோல் கழிவுகள் முழுவதும் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. அவற்றை வீணாக்காமல், வைக்கோல், கோதுமை தவிடு, பருத்தி போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்கலாம். இந்தத் திட்டம் குறித்து, விரைவில் அரசு அறிக்கை வெளியிடும். இதனால், வீணாகும் பண்ணைக் கழிவுகளால் விவசாயிகளுக்குப் புதிய வருவாய் கிடைக்கும்” என, மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூரில் நடந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கருத்தரங்கில் பேசினார்.
