PUBLISHED ON : ஆக 08, 2016

அ நிறம் | அளவு
குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில், மத்திய அரசு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தப் புதிய சட்டத்தின்படி, “குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவோருக்கு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். விளம்பரங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவற்றில் குழந்தைகளை நடிக்க வைக்கவும் குரல் கொடுக்க வைக்கவும் தடையில்லை. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தங்கள் வீட்டு வேலைகள் செய்வதை இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது.”
