தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முதலும் கடைசியும்...

முதலும் கடைசியும்...

முதலும் கடைசியும்...


PUBLISHED ON : ஆக 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகஸ்டு 6ஆம் தேதி, 1945ஆம் ஆண்டு - 'அறிவியல் முன்னேற்றத்தை அழிவுக்குப் பயன்படுத்தக்கூடாது' என்ற அமைதிக் கோட்பாடு உலகில் வலுப்பெறக் காரணமான தினம். அன்றைக்குத்தான், இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரத்தில் அணுகுண்டு வீசியது. இந்தக் கோர சம்பவம் நடந்து, இந்த வருடத்துடன் 71 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

அணுகுண்டு விழுந்தவுடன் வெளிப்பட்ட 4,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும், கதிர்வீச்சையும் தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தார்கள். இருந்தும் மூன்றே நாட்களில் அடுத்த அணுகுண்டை நாகசாகி நகரில் இரக்கமின்றி வீசியது, அமெரிக்கா.

இந்த அணுகுண்டுகள் வெளிப்படுத்திய கதிர்வீச்சின் பாதிப்புகள் ஒரே நாளோடு முடியவில்லை. ஒரு மாதம், ஒரு வருடம் எனக் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மாண்டார்கள். ஹிரோஷிமா நகர நிர்வாகத்தின் கணக்கெடுப்பின்படி, குண்டுவெடிப்பு நடந்த நாளில் இருந்து 7 ஆண்டுகள் வரை மரணமடைந்தவர்களின் என்ணிக்கை ௨,30,000. கதிர்வீச்சு ஏற்படுத்திய மரபணு சேதத்தால், இன்றளவிலும் பிறவி ஊனங்களோடும், மரபுக்குறைபாடுகளோடும் அங்கு குழந்தைகள் பிறக்கின்றன. குரூரமான சேதத்தை ஏற்படுத்திய அந்த அணுகுண்டுகளுக்கு அமெரிக்கா ரசனையுடன் சூட்டிய பெயர்கள் 'லிட்டில் பாய்' மற்றும் 'ஃபாட் பாய்'.

உலகில் வெடிக்கப்பட்ட முதல் இரு அணுகுண்டுகள் என்பதோடு, கடைசி இரு அணுகுண்டுகளும் இவைதான் என்பது நிலைக்க வேண்டும். அப்போதுதான் உலகில் மனித நேயம் ஒரளவுக்காவது நிலைத்திருக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us