தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முதல் தமிழ் அச்சுப் புத்தகம்!

முதல் தமிழ் அச்சுப் புத்தகம்!

முதல் தமிழ் அச்சுப் புத்தகம்!


PUBLISHED ON : பிப் 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தம்பிரான் வணக்கம்'. இதுதான், தமிழில் அச்சிடப்பட்டு வெளியான முதல் நூல். இது ஒரு கிறிஸ்தவ ஜெப நூல். கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் 1556 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி அச்சடிக்கப்பட்டது. ஐரோப்பிய பாதிரியார்கள் தமிழகத்தில் சமயப்பணி செய்வதற்காகத் தமிழ் கற்றார்கள். பைபிளின் பகுதிகளையும் ஜெபங்களையும் தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டார்கள்.

'டாக்ட்ரினா கிறிஸ்டம்'(Doctrina Christam) என்ற போர்த்துகீசிய நூலின் மொழிபெயர்ப்புதான் 'தம்பிரான் வணக்கம்'. இதை மொழிபெயர்த்தவர், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஹென்றிகஸ் ஹென்றிகே (Henricus Henrique) என்ற பாதிரியார். முதல் நூல் அச்சடிக்கப்பட்டு 157 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தலோமியோ சீகன்பால்க் (Bartholomew Ziegenbalg) என்ற ஜெர்மானியப் பாதிரியார் தரங்கம்பாடியில் ஓர் அச்சகத்தை நிறுவினார். இது நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us