sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

மலர்களே மலர்களே மனம் மயக்கும் மணம்

/

மலர்களே மலர்களே மனம் மயக்கும் மணம்

மலர்களே மலர்களே மனம் மயக்கும் மணம்

மலர்களே மலர்களே மனம் மயக்கும் மணம்


PUBLISHED ON : ஜூன் 26, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 26, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லிகையின் மனம் ஆளைத் தூக்கும் என்றால், ரோஜாவின் மணம் மனதை மயக்கும்; மலர் என்றதும், நமது மனதில் வருவது அதன் வண்ணவண்ண நிறங்களும், மனதை மயக்கும் அதன் நறுமணமும்தான் அல்லவா? மலர்களின் நறுமணத்தன்மையைக் கவனத்தில் கொண்டுதான், இலக்கியங்களில் மலரை 'நறுவீ' என்று அழைக்கிறார்கள்.

மலரின் மணம், அதன் பூவிதழ்களில் கசியும் ஒருவகை நறுமண எண்ணெயிலிருந்து வருகிறது. தாவரங்கள் தமது மலர்களை உருவாக்கும்போது, இந்த நறுமண எண்ணெய் வேதிப்பொருளையும் சுரக்கின்றன. இந்த வேதிப்பொருட்கள், குறை நிறை உடையவை. இவை உருக்குலைந்து சிதைந்து, ஆவியாகி காற்றில் நாற்புறமும் பரவுகின்றன.

மலர்களை உருவாக்கி, அதிலிருந்து சிக்கல் மிகுந்த வேதிப்பொருட்களான நறுமண எண்ணெய்களை உருவாக்க, தாவரம் பெரும் ஆற்றலை செலவழிக்க வேண்டும். இவ்வளவு ஆற்றலைச் செலவுசெய்து, மலர்கள் நறுமணத்தை உருவாக்குவது ஏன் என்ற கேள்வி நமக்கு எழும்.

நாம், மலர்களின் நறுமணத்தில் திளைத்து விடுகிறோம் என்றாலும், நமக்காக நறுமணத்தை உருவாக்குவதில்லை மலர்கள். மகரந்தச் சேர்க்கை புரிய உதவும் பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்கவே, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன. பூச்சிகளை மகரந்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே, நறுமணம் என்கிறார்கள், தாவரவியல் நிபுணர்கள்.

சில மலர்கள் இரவிலும், சில மலர்கள் பகல் பொழுதிலும் மலரும். மல்லிகைப் பூவைப் போல, இரவில் மலரும் மலர்கள் பெரும்பாலும் வெண்மை நிறமும், நறுமணம் மிகுந்தவையாகவும் இருக்கும். இரவில் நடமாடும் அந்துப்பூச்சி, விட்டில் பூச்சிகள் அயல் மகரந்தச் சேர்க்கை செய்யும் மலர்கள்தான் பெரும்பாலும் கூடுதல் நறுமணத்துடன் இருக்கும். பறவைகளால் நறுமணத்தை நுகரமுடியாது என்பதால், மகரந்தச் சேர்க்கை செய்யும் பூக்கள் நறுமணம் வீசுவதில்லை.

எல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிதமாக இருப்பதில்லை. ஒவ்வொரு பூவின் நறுமணத்தையும் பூச்சிகள் நன்றாக நினைவில் வைத்திருக்கும். தங்களுக்கு விருப்பமான நறுமணத்தை அவை அறிந்திருக்கும். பூச்சி இனங்களுக்கு ஒவ்வொரு நறுமணமும் அந்தச் செடியின் 'விசிட்டிங் கார்டு'. எந்த நறுமணம் எங்கிருந்து வருகிறது என கண்டுணர்ந்து, பூச்சிகள் ஒவ்வொரு தாவரத்தையும் இனம் காண்கின்றன. தமக்குப் பிடித்த தாவரத்திற்குச் சென்று, மகரந்தச் சேர்க்கையை உருவாக்குகின்றன.

ஆனால், எல்லா மலர்களும் 'நறுமணம்'தான் தருகின்றன என தவறாகக் கருதிவிடவேண்டாம். கிழக்கு ஆசியப் பகுதியில் வளரும் ஒரு வகை தாவரத்தின் பூ, இறந்த உயிரினத்தின் உடல் அழுகியதைப் போன்ற துர்நாற்றத்தை வெளியிடும்.

'டைடானியம்' (Titanium) எனும் இந்த (Corpse flower, Amorphophallus Titanium - கார்ப்ஸ் ஃப்ளவர், அமோர்போபாலஸ் டைடானியம்) மலரின் சிறப்பு இது. பெரிய இன மலர்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டிற்கு மூன்று முறை மட்டுமே பூக்கும் மலர் என்பதால், இதன் மணத்தைக்கூட பொருட்படுத்தாமல், பார்வையாளர்கள் பெருமளவில் கண்டு மகிழ்கின்றனர். இதற்கென சிறப்பு சுற்றுலா வசதிகளும் உண்டு.

அமோர்போபாலஸ் டைடானியம் Amorphophallus Titanium






      Dinamalar
      Follow us