தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/செவிக்கு உணவு

செவிக்கு உணவு

செவிக்கு உணவு


PUBLISHED ON : அக் 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாதாரணமாக நம்முடைய காது கேட்கக் கூடிய சத்தத்தின் அளவு 20 டெசிபெல்(Decibel). ஒலியை டெசிபல் அளவில் குறிப்பிடுகிறார்கள்.

மிகக் குறைந்த அளவாக பத்து டெசிபல் அளவு வரை கேட்க முடியும். கீழே விழும் பின் (pin) சத்தம் அந்த அளவுடையதே!

மனிதரை விட சில விலங்குகள் குறைவான டெசிபல் அளவில் கேட்கும் திறன் கொண்டவை.

புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்று மூன்று பிரிவுகள் செவிக்கு. ஒலி அலைகளை நரம்பின் உணர்வு அலைகளாக செவிகள் மாற்றுகின்றன.

புறச் செவியில் சத்தம் உள்ளே சென்று, காது ஜவ்வை அசைக்கிறது. அந்த ஜவ்வு நடுக் காதில் இருக்கும் மிக மெல்லிய எலும்புகளை அசைக்கிறது. அந்த அசைவில் உள் காதிலுள்ள திரவம் அசைகிறது. இதனால் செவி நரம்பு தூண்டப்பட்டு, அந்த ஓசை நம் மூளைக்குச் சென்று சத்தத்தை உணர வைக்கிறது. ஒலி அலைகளை மூளை புரிந்து கொள்கிறது.

இப்படி காது வழியாக நாம் சத்தங்களை கேட்பதால்தான், மொழியின் உச்சரிப்பை அறிய முடிகிறது. அதற்கேற்றவாறு பேச முடிகிறது.

குழந்தைகளுக்கு காதின் உட்பகுதி மிகவும் நுட்பமாக இருப்பதால், எளிதில் நோய் தொற்று ஏற்படுகிறது.

அதிக சத்தம் ஆபத்தைக் கொடுக்கும். நாம் 90 டெசிபல் அளவுள்ள சத்தத்தை தொடர்ந்து கேட்கும்போது, செவிகள் செவிட்டுத் தன்மையை அடையும். ஜெட் விமானத்தின் சத்தம் 140 டெசிபல் அளவு கொண்டது.

'செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' என்றார் வள்ளுவர். செவி உணவு அறிவை வளர்க்கும். நம் அறிவை வளர்க்கக் கூடிய உறுப்புகளில் ஒன்றாக செவிகள் இருக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us