PUBLISHED ON : மே 02, 2016

அன்னையர் தினம் மே 10
அம்மாக்களுக்கான ஒரு தினமாக மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையைக் கடைப்பிடிக்கிறார்கள். 'அன்னையர் தினம்' அமெரிக்காவில்தான் தொடங்கியது.
இது தொடங்கி நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது. 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்ற வாக்கியத்தில் முதலிடம் பிடிப்பது அம்மாதான், அல்லவா?
அன்னையர் தினத்தைக் கொண்டாடுவது என்பதை விட்டுவிட்டுப் பார்த்தால் தாய்த் தெய்வ வழிபாடு என்பது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உலகமெங்கும் நடைபெற்றுவருகிறது.
கிரேக்கர்கள் வசந்த காலத்தின் தொடக்கத்தை, தாய்த் தெய்வத்தை வணங்கிக் கொண்டாடினார்கள். ரோமர்களும் சைபேலி என்னும் தாய்த் தெய்வத்தை வணங்கினார்கள். கிறிஸ்தவத்தின் வருகைக்குப் பிறகு மாதா கோவில் வழிபாடு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் 'கொற்றவை' வழிபாடு சிறப்பாக நடந்திருக்கிறது.
ஜார்விஸ் என்கிற சமூக சேவகி காயம்பட்டவர்களுக்கு சேவை செய்து வந்தார். அவருக்குப் பின் அவரது மகள் அன்னா ஜார்விஸ், பிலடெல்பியா மாநிலம் கிராப்டன் கிராமத்தில், அம்மாவின் பணியைத் தொடர்ந்தார். அனைவரும் பெற்ற தாயை நன்றாகக் கவனிக்கவேண்டும் என்பது அவர் எண்ணம். அதையொட்டி 1912ல் மே மாத இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடினார். அன்னையர் தினம் கொண்டாடப்பட, அரசு அமைப்புகளுக்குக் கோரிக்கை விடுத்தார் அன்னா. அதையடுத்து அன்னையர் தினத்தைக் கொண்டாடுமாறு அரசாங்கமும் மக்களிடம் கேட்டுக் கொண்டது. உலகம் முழுதும் அன்னையர் தினம் பரவியது.
ஆனால், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் அது கொண்டாடப்படுகிறது.இந்தியாவில் மே 8ல் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
நாம் எப்போழுதும்போல, அன்னை தந்தையரை எந்நாளும் போற்றுவோம்.
