தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான்கு வரி புல் எலி

நான்கு வரி புல் எலி

நான்கு வரி புல் எலி


PUBLISHED ON : ஜன 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆங்கிலப் பெயர்: 'ஃபோர் ஸ்ட்ரைப்டு கிராஸ் மைஸ்' (Four Striped Grass Mice)

உயிரியல் பெயர்: 'ராப்டோமைஸ் புமிலியோ'(Rhabdomys Pumilio)

எடை: 50 கிராம்

நீளம்: 21 செ.மீ.

ஆயுட்காலம்: 5 ஆண்டுகள்

நமக்கு நன்கு பரிச்சயமான நான்கு வரி நோட்டுகளைப் போலவே முதுகில் நான்கு வரியைக்கொண்ட உயிரினம்தான் நால்வரி எலி. அணில்களுக்கு இருப்பதைப் போலவே இதன் முதுகில் சாம்பல், கருப்பு, மஞ்சள் நிறங்களில் கோடுகள் இருக்கும். பாலூட்டியான இது 'முரிடே' (Muridae) உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்தது. உயர்ந்த மலைப்பகுதிகளில் மட்டுமே வசிக்கும் இது ஓர் அனைத்துண்ணி. இவற்றில் இரண்டு இனங்கள் உள்ளன.

'ராப்டோமைஸ் டைலெக்டஸ்' (Rhabdomys Dilectus) என்ற உயிரியல் பெயர் உடைய இன்னொரு இனம் மரங்களிலும் வசிக்கக்கூடியது. புற்கள் நிறைந்த பகுதியில் உணவு தேடி ஓடிக்கொண்டிருக்கும். பகல் பொழுதுகளில் மட்டுமே நடமாடும். ஒரு நாளில் சுமார் 500 மீட்டர் தொலைவு வரை சுற்றித் திரியும். புல், விதை, வேர், கிழங்கு, பூச்சி போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். புற்கள் நிறைந்த பகுதியில் சிறிய வளைகளைத் தோண்டி அதில் வசிக்கும். காட்டுப் பூனை, நரி, பாம்பு, ஆந்தை போன்ற உயிரினங்களால் இவை வேட்டையாடப்படுகின்றன.

குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்யும். ஒரு தடவைக்கு ஆறு குட்டிகள் வரை போடும். பிறக்கும் எலிக்குஞ்சின் எடை 3 கிராம் மட்டுமே இருக்கும். இதன் குட்டிகள் 'பிங்கி' (Pinkie) எனப்படும். தென் ஆப்பிரிக்கா, டான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலை போன்ற பகுதிகளில் இந்த எலி அதிகம் காணப்படுகிறது. பாலைவனப்பகுதிகளிலும் இதைக் காணலாம். வறட்சி, பருவநிலை மாற்றங்கள் போன்ற காரணங்களினால் இந்த எலி இனம் வேகமாக அழிந்து வருகிறது. அழியும் தறுவாயில் உள்ள உயிரினம் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் இந்த எலி இனம் இடம்பெற்றுள்ளது.

- அ.ஆனந்தி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us