sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/நண்பன்டா...

நண்பன்டா...

நண்பன்டா...


PUBLISHED ON : ஜூலை 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆதிகாலம் முதற்கொண்டு மனிதனின் செல்லமான வளர்ப்புப் பிராணியாக இருப்பவை நாய்கள். காவலுக்கும், வேட்டைக்கும் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழும் நாய், 'மனிதர்களின் நண்பன்'.

கிரேக்க மன்னர் அலெக்ஸாண்டர் எவ்வளவு புகழ் பெற்றவரோ அவ்வளவு புகழ்பெற்றது அவருடைய நாயும்! அலெக்ஸாண்டரின் நாயின் பெயர் 'பெரிடாஸ்' (Peritas). ஒரு சிங்கத்தையும் யானையையும் கொல்கிற அளவிற்கு வலிமையானதாக இந்த நாய் இருந்திருக்கிறது. இந்த நாயின் மீது உள்ள பாசத்தால் ஒரு நகருக்கே அதன் பெயரை வைத்திருக்கிறார் அலெக்ஸாண்டர்!

யோக் ஷையர் டெரியர் (Yolkshire Terrier)

இது நாயா அல்லது பொம்மையா என்று யோசிக்க வைக்கும் இந்த நாய்! இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த நாய்தான் நாய் இனங்களில் மிகச் சிறியது. இதன் எடை 3 கிலோ முதல் 7 கிலோவரை இருக்கும். இங்கிலாந்தில் 19ஆம் நூற்றாண்டில் பஞ்சு ஆலைகளில் எலிகளைப் பிடிப்பதற்காகப் பயன்பட்டது இந்த நாய். உலகின் மிகச் சிறிய 'யோக் ஷையர் டெரியர்' நாய் ஒன்றும் உள்ளது. 10 செ.மீ. அகல உடலும், தோள் வரை 6.5 செ.மீ உயரமும் உடைய அதன் எடை 110 கிராம் மட்டுமே!

நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டே திரிவதால் 'நாய்' என்னும் பெயர் தமிழில் தோன்றியது.

கிரேட் டேன் (Great Dane)

பார்ப்பவர்களை, தன் தோற்றத்தாலேயே மிரட்டிவிடும் இந்த பிரமாண்ட நாய்! நாய்களிலேயே உயரமானது இதுதான். சுமார் 3.5 அடி உயரம்வரை இருக்கும் இவை வேட்டை நாய்களாகவும், தோழமை நாய்களாகவும் திகழ்கின்றன.

இங்கிலிஷ் மஸ்டிஃப் (English Mastiff)

சதுர வடிவப் பெரிய தலை. தலைக்கனம் கொஞ்சம் அதிகம்தான், 'இங்கிலிஷ் முஸ்டிஃப்' நாய்களுக்கு! இவை முற்காலத்தில் வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் மனிதர்களோடு பழகி அன்பை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. 'கின்னஸ்' சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற 156 கிலோ எடை உடைய மிகப் பெரிய இங்கிலிஷ் மஸ்டிஃப் நாய்கூட உண்டு!

சோழர் கால ஓவியத்தில் நாய்

தஞ்சை பெரிய கோயிலின் உள் பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் அலங்கு என்ற நாயின் ஓவியம் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டு நாய் இனங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது அலங்கு. இந்த அலங்கின் முதுகு நீண்டும், வால் நன்றாக வளைந்தும் காணப்படும். இந்த வகை நாய்கள் தற்போது இல்லை.

ரொம்பப் பழைய காலத்தில் தமிழகத்தில் 'பாரி வேட்டை' எனப்படும் போட்டி இருந்தது. அதில் நாய் முக்கிய பங்கு வகித்தது.

உலக அளவில் பிரபலமான சில நாய் வகைகள்

லேப்ரடார் (Labradar)

புல் டாக் (Bull Dog)

ஜெர்மன் ஷெப்பர்டு (German Sheperd)

பீகிள் (Beagle)

பக் (Pug)

டால்மேஷியன் (Dalmatian)

பொமரேனியன் (Pomeranian)

டாபர்மேன் (Dobarman)

தமிழக நாய்கள்: சிவிங்கி, கன்னி, கோம்பை, தோல், சடை, ராஜபாளையம், சிப்பிப்பாறை எனப் பல வகையான நாய்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

வாழ்நாள் 7 முதல் 20 ஆண்டுகள்

'கே 9' எந்திர நாய்

'டாக்டர் ஹூ' (Doctor Who) என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சித் தொடரில் 'கே 9' (K9) என்ற கதாபாத்திரமாக நடிக்கிற எந்திர நாய் மிகப் பிரபலமானது. சிறுவர்களுக்கான இந்தத் தொலைக்காட்சித் தொடருக்கு சிறியவர் மட்டுமல்ல, பெரியவர்களும் மிகப்பெரும் ரசிகர்கள்!

பாபி (Bobbie)

பயணத்தின் போது இன்டியானாவில் தொலைந்து போய், ஆறு மாதங்கள் கழித்து தன் வளர்ப்பாளர்களைச் சந்தித்த இந்த நாய் மிகப் பிரபலமானது. சுமார் 2800 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து தன் வளர்ப்பாளர்களைச் சந்தித்திருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்!

நாயைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்: ஞாளி, ஞமலி, ஞெள்ளை, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கல், கூரன், கொக்கு, முலவை, முவ்வை, குடத்தி, குக்குரன், கடுவாய், வடி, வங்கு, நயக்கன், கோனாய், பாகி, பாசி, முடுவல்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us