PUBLISHED ON : டிச 04, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய விமானப் படைக்குச் சொந்தமாக பல விமானங்கள் உள்ளன. அதில் IL-78M என்ற விமானமும் ஒன்று. இது ஒரு டேங்கர் போன்றது. அதாவது ஒரு விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது, எரிபொருள் தேவை ஏற்படுமாயின், டேங்கர் விமானம் உடனடியாக அதன் அருகே பறந்து செல்லும். வானில் பறந்துகொண்டிருக்கும் போதே, இதிலிருந்து மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப முடியும். சில நாட்களுக்கு முன், சோதனைக்காக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்திற்கு, நடுவானில் பறந்துகொண்டிருக்கும் போதே எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. முதல் முயற்சியிலேயே இப்பணி வெற்றிகரமாக அமைந்தது. இது விமானப்படை வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

