தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வாயில்லா வண்ணத்துப்பூச்சி!

வாயில்லா வண்ணத்துப்பூச்சி!

வாயில்லா வண்ணத்துப்பூச்சி!


PUBLISHED ON : அக் 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செடிக்கு செடி தாவி, பூவில் உள்ள தேனை உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு வாய் கிடையாது. பற்களும் கிடையாது. அப்புறம் எப்படி தேனை உறிஞ்சுகின்றன? உயிர் வாழ்கின்றன?

பூக்களில் உள்ள தேனை உறிஞ்ச ஸ்ரா (Straw)போன்ற உறிஞ்சு குழல் (புரோபோசிஸ் -Proboscis) உள்ளது. இந்த உறிஞ்சு குழல் வழியாகத்தான் பூக்களில் உள்ள தேனை எடுக்கின்றன. இந்தக் குழலுக்கு சுவை அறியும் தன்மை கிடையாது.

வாயில்லை, பல்லில்லை, சுவையில்லை அப்புறம் என்னதான் வாழ்க்கை என்று எண்ண வேண்டாம். அதற்கு பதிலாய் கால்கள் அறிந்து கொள்கின்றன சுவையை.

இலை மீது அமர்ந்த உடனேயே அது தரமான இலையா, இல்லையா என்பதை அறியும் திறன் வண்ணத்துப்பூச்சிகளுக்கு உண்டு. எல்லா இலைகளையும் உணவாக உட்கொள்வதில்லை. சுவையான இலைகளையே உண்ணுகின்றன.

பசை போன்ற ஒரு திரவத்தை இலையில் தடவிய பிறகு, பாதுகாப்பாக முட்டைகளை இடுகின்றன.

இதற்கு நான்கு இறக்கைகள், பருவங்களும் நான்கு. முட்டை, லார்வா, கூட்டுப்புழு, வளர்ந்த பருவம்.

உலகம் முழுக்க 15,000 இல் இருந்து 20,000 வகையான வண்ணத்துப் பூச்சிகள் இருக்கலாம் என அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

லேபிடோப்டேரா (Lepidoptera) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. 3,500 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய எகிப்து ஓவியங்களில் வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இயற்கை நமக்குத் தந்த உயிருள்ள ஓவியம் வண்ணத்துப்பூச்சிகள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us