PUBLISHED ON : அக் 18, 2016

அ நிறம் | அளவு
நாம் இக்காலத்தில் பயன்படுத்துகிற தமிழுக்கும், சங்க காலத்தில் பயன்படுத்திய தமிழுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. நமக்கு நன்கு தெரிந்த பெயர்களில் ஒன்று இஞ்சி. சமையலுக்கும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
ஆனால், அந்தக் காலத்தில் இஞ்சி என்றால் எதைக் குறிக்கும் தெரியுமா? கோட்டையின் மதில் சுவரை குறிக்கும். 'இஞ்சி சூழ் தஞ்சை' என்று தேவாரத்தில் ஒரு வரி வருகிறது. கோட்டை மதில் சுவர்களால் சூழப்பட்ட தஞ்சாவூர் என்பது இதற்கான பொருள். மதுரை மாவட்டத்தில் வட பழஞ்சி, தென் பழஞ்சி என்ற ஊர்கள் உள்ளன. மன்னராட்சிக் காலத்தில் அந்த ஊரில் பெரிய கோட்டை மதில் சுவர்கள் இருந்திருக்கலாம்.
