உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 11, 2016

அ நிறம் | அளவு
சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஒரு பெருஞ்சுவர் உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள கும்பல்கர்க் கோட்டையின் பெருஞ்சுவர்தான் அது. ஆறு அடி அகலமும் 36 கிலோ மீட்டர் தூரமும் உடைய இந்தப் பெருஞ்சுவர் ஆரவல்லி மலைத் தொடரின் மீது அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1100 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. ராஜா ராணா கும்பா என்பவரால் 15ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பு 2013ஆம் ஆண்டில் கும்பல்கர்க் கோட்டையை உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. இதை 'இந்தியப் பெருஞ்சுவர்' என்று குறிப்பிடுகிறார்கள்.
