உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 12, 2016

அ நிறம் | அளவு
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அரசியல் அமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு, ஒப்புதல் அளித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத் திருத்த மசோதா, 50 சதவீத மாநில சட்டப்பேரவைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்படும். இந்த மசோதாவுக்கு தற்போது 19 மாநிலங்களின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அன்று, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் கிடைத்துள்ளது. தற்போது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்றன. இதனை மாற்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரிகளை இந்தச் சட்டம் அமல்படுத்தும்.
