உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 05, 2016

அ நிறம் | அளவு
ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், ஒரே நேரத்தில், 500 மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேரன் லேமன் (Darren Lehman) பயிற்சி அளித்தார். மாணவர்களுடன் சேர்ந்து, ஆஸ்திரேலிய அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பயிற்சியாளர் கூறுகையில், ''30 நிமிடங்கள் தொடர்ந்து, பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என, அனைத்தையும் மாணவர்கள் பயிற்சி செய்தனர். இதன்மூலம் புதிய கின்னஸ் சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாதனை படைத்ததைவிட, 500 மாணவர்கள் ஒன்று சேர்ந்து பயிற்சி எடுத்ததே எனக்கு மகிழ்ச்சியான விஷயம்,'' என்றார்.
