தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/குஜாவா பழம்

குஜாவா பழம்

குஜாவா பழம்


PUBLISHED ON : செப் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய கனிகளில் கொய்யாப் பழமும் ஒன்று. இதில் ஏ, பி, சி, இ வைட்டமின்கள் இருக்கின்றன. ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு வைட்டமின் சி இருக்கிறது. அன்னாசியை விட மூன்று மடங்கு புரோட்டீனும், நான்கு மடங்கு நார் சத்தும் உள்ளது. வாழைப்பழத்தை விட கூடுதலாக பொட்டாசியம் உள்ளது. இதனால் கொய்யா 'சூப்பர் புரூட்' (Super fruit) என்று அழைக்கப்படுகிறது.

நூறு கிராம் பழத்தில் 228 கிராம் வைட்டமின் சி இருக்கிறது. செடி, மரம் இரண்டிலும் விளைகிறது கொய்யா. இதில் இருந்து ஜெல்லி, ஐஸ்கிரீம், பானங்கள், இனிப்பு மிட்டாய் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. கொய்யா இலைகள் கறுப்பு நிறமூட்டுவதற்காக ஜவுளி உற்பத்தியில் பயன்படுகின்றன. இதன் இலையில் அலங்கார வளைவுகள் செய்யப்படுகின்றன.

கொய்யா கொழுந்து வாய்ப்புண்ணை நீக்குகிறது. இலைச்சாறு காயங்களை ஆற்றுகிறது. இலையின் தேநீர் வயிற்றுக்கடுப்பை நீக்கும். கொய்யாப் பழம் கொழுப்பை குறைத்து, உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறு, சருமம் தொடர்பான பிரச்னைகளை நீக்குகிறது.

இதன் வாழ்நாள் சுமார் 40 ஆண்டுகள். இதன் அறிவியல் பெயர் சீடியம் குஜாவா (Psidium guajava). இனி வழியில் எங்கு கொய்யாப் பழத்தைப் பார்த்தாலும் வாங்கி சாப்பிடத் தோணும்தானே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us