தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கதைகளில் வரும் விலங்கு! பனியையும் நெருப்பையும் உருவாக்கும் டிராகன்!

கதைகளில் வரும் விலங்கு! பனியையும் நெருப்பையும் உருவாக்கும் டிராகன்!

கதைகளில் வரும் விலங்கு! பனியையும் நெருப்பையும் உருவாக்கும் டிராகன்!


PUBLISHED ON : செப் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னமொரு காலத்தில் ஒரு பயங்கரமான விலங்கு இருந்ததாம். அதன் பெயர் டிராகன் (Dragon). அது மனிதர்கள் நிரம்பிய நகரத்தில் திரிந்தது. வவ்வாலைப் போன்ற, ஆனால் பிரமாண்டமான சிறகுகள் அதற்கு. அது சிறகை அடிக்கும் சத்தம் பல கிலோ மீட்டர்கள் தாண்டியும் கேட்கும். ஒரே அடியில் ஒரு காளையைக் கூடக் கொன்றுவிடும் அளவு பலம் வாய்ந்தது. அதன் சுவாசத்தில் இருந்து நெருப்பு வெளிவரும்!

அந்த நகரத்தில் இருக்கும் மனிதர்கள் ஆண்டுக்கு ஒரு முறை அந்த டிராகனுக்கு ஒரு சிறுமியைப் பலியாகக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அது ஊருக்குள் வந்து எல்லாரையும் கொன்றுவிடும். ஒரு வருடம், அந்த டிராகனுக்கு இரையாக இளவரசி சப்ரா போக வேண்டிய முறை வந்தது. அந்நகரத்தில் உள்ள தேவாலயத்தின் பாதுகாப்பாளனான ஜார்ஜ், இளவரசியைக் காப்பாற்ற முன்வந்தான். தன்னிடம் இருந்த 'அஸ்சலான்' என்கிற மந்திர வாளால் டிராகனைக் காயப்படுத்தினான். இளவரசி, தன் கழுத்துப் பட்டையைக் கழற்றி டிராகனின் கழுத்தில் வீசினாள். அதை அப்படியே நகரத்தின் சந்தைப்பக்கமாக இழுத்துவந்தாள். அங்கே ஜார்ஜ் அந்த டிராகனை ஒரே அடியில் வீழ்த்தினான்.

பல வகையான டிராகன்கள் இருப்பதாக அந்தக் கால ஜனங்கள் நம்பினார்கள். அவை வாலைச் சுழற்றி அடித்தால், கட்டடங்கள் தவிடுபொடி ஆகுமாம். விஷப் புகை வளையங்களை ஊதுமாம். நெருப்பை சுவாசத்தின் வழியாக வெளிவிடுமாம். (ஆனால், அதன் மூக்கு பொசுங்காது!)

ஆனால், சீனாவிலும் மற்ற ஆசிய நாடுகளிலும் டிராகன் நல்ல, அதிர்ஷ்டம் தரும், ஜனங்களைப் பாதுகாக்கக்கூடிய பிராணியாகக் கருதப்பட்டது. சீனப் பேரரசர்கள், தங்கள் சின்னமாக டிராகனை வைத்துக்கொண்டார்கள். அங்கே டிராகன்கள் தண்ணீரோடு தொடர்பு உடையதாகக் கருதப்பட்டது. புகைக்கும், நெருப்புக்கும் பதிலாக ஆசிய டிராகன்கள், பனியையும் மேகத்தையும் சுவாசத்தில் வெளிவிட்டன! சீனாவின் கொண்டாட்டங்களில் பிரமாண்டமான காகித டிராகன்கள் இடம் பெறுவதை நீங்கள் 'டிவி'யில் பார்த்திருக்கலாம்.

டிராகன் பற்றிய கதைகள் எப்படி வந்திருக்கும்?

பழங்கால மனிதர் யாராவது ஒருவர் டினோசாரின் எலும்பைக் கண்டெடுத்திருப்பார். அது என்ன மிருகம் என்று தெரியாமல் டிராகன் என்று கதை கட்டிவிட்டிருப்பார்.

உங்கள் தகவலுக்கு…

ராட்சத கொமோடோ டிராகன் என்கிற ஒரு பிராணி இந்தோனேசியாவில் காணப்படுகிறது. இது, மூன்று மீட்டர் நீளத்துக்கு வளரக்கூடிய பல்லி வகை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us