sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/பேனா தொடாத கைகள்!

பேனா தொடாத கைகள்!

பேனா தொடாத கைகள்!


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் ஜூன் 12

விடுமுறை முடிந்துவிட்டது. புத்தகப் பை ஒரு கையில், சாப்பாட்டு டப்பா இன்னொரு கையில் என பரபரப்பாக, பள்ளிக்கூடம் செல்லத் தயாராகி இருப்போம். சில குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவர்கள் பெற்றோருடனோ அல்லது தனியாகவோ வேலைக்குச் செல்வதைப் பார்க்கும்போது என்ன நினைப்போம்?

அவர்களுக்கும், படிக்க வேண்டுமென்ற ஆசை மனதில் இருக்கும். இருந்தாலும், குடும்ப வறுமை, பெற்றோர் இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால் அவர்களால் படிக்க முடியாமல் போகிறது.

இந்த வாழ்க்கைச் சூழ்நிலை அவர்களைக் குழந்தைகளாக இருக்கவிடுவதில்லை. பேனா பிடித்து எழுத வேண்டிய கைகள் விவசாயம், தீப்பெட்டி தொழிற்சாலை, செங்கல் சூளை, துணிக்கடைகள், உணவகங்கள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் வேலை செய்து தேய்கின்றன. சிலர் மோசமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொத்தடிமைகளாக ஆண்டுக் கணக்கில் வேலை செய்கின்றனர்.

நமக்கெல்லாம், பள்ளிக்கூடம் இல்லாத நாட்கள் விடுமுறைதான். வேலை பார்க்கும் இவர்களுக்கோ விடுமுறை கிடையாது. வேலை நாளிலும் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை! கொஞ்சூண்டு சம்பளம்.

துள்ளித் திரிந்து, ஆடிப் பாடி சிறகடித்துப் பறக்க வேண்டிய வயதில், இயந்திரமாக இருக்கிறார்கள். முதலில் இவர்களுடைய பெற்றோரின் வருமானத்திற்குச் சிறப்புத் திட்டங்களை அரசாங்கம் வகுக்க வேண்டும். வறுமை ஒழிந்தால், குழந்தைகள் கல்வி கற்பது அதிகரிக்கும்.

80 குழந்தைத் தொழிலாளர்களில் சுமார் 80% பேர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். நான்கில் மூன்று பேர் விவசாயம், வீட்டு வேலை, வீட்டில் இருந்தே செய்யும் வேலைகள் மற்றும் குடும்பத் தொழிலில் ஈடுபடுவதாக ஆய்வறிக்கை சொல்கிறது.

55 இந்தியாவில் பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்த மாநிலங்களில் மட்டும் சுமார் 55 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள்!

1997 எகிப்து, ஜிம்பாப்வே போன்ற நாடுகளில், அதிக அளவில் தொடங்கப்பட்ட ஆரம்பப் பாடசாலைகளினால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1997க்குப் பிறகு பெருமளவு குறைந்திருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us