தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு!

குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு!

குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு!


PUBLISHED ON : ஆக 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாசாவின் உணவு ஆராய்ச்சித்துறை, பாசியில் (algae) இருந்து உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களைப் (fatty acid) பெற முடியும் என்று கண்டறிந்தது.

விண்வெளி வீரர்களின் உணவான பார்முலெயிட் (Formulaid) கலவையைத் தயாரித்த, மார்டெக் பயோசயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 1970- - ௮0களில் நாசாவில் உணவு ஆராய்ச்சித்துறையில் வேலை செய்து வந்தனர்.

நாசாவின் இந்த ஆராய்ச்சி நின்றபிறகு, அங்கு பணியாற்றிய ஆராய்ச்சிக்குழுவினர், உணவு ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். அவர்கள், பாசியிலிருந்து அராகிடானிக் அமிலம் (arachidonic acid), டொகோசாஹெக்சேனோயிக் அமிலம் (docosahexaenoic acid) ஆகியவற்றை உருவாக்க முடியும் என்று கண்டறிந்தனர்.

இவை, தாய்ப்பாலிலுள்ள வளர்ச்சி ஊக்கிகள். இதோடு, ஒமேகா -3 மற்றும் ஒமேகா- 6 போன்ற கொழுப்பு அமிலங்களையும், மேலும் சில பொருட்களையும் சேர்த்தனர். இப்படித்தான் உலகப் புகழ்பெற்ற பார்முலெயிட் கலவையும், மார்டெக் பயோசைன்ஸ் நிறுவனமும் பிறந்தன. இந்த உணவுப்பொருள் குழந்தைகளின் மூளை, கண்கள் மற்றும் திசு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

- சரண்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us