PUBLISHED ON : ஆக 04, 2025

கேரளத்தின் பாலக்காட்டில் உள்ள ஒரு பழமையான கோட்டை இது.
1766ஆம் ஆண்டு இதை சேகரி வர்மன் என்ற மன்னர் (Shekhari varma) ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவருக்கும்,கோழிக்கோடு சமோரின் (Zamorin) மன்னருக்கும் போர் நடந்தது. அந்தப் போரில் தனக்கு உதவும் படி, மைசூரை ஆண்ட ஹைதர் அலியிடம் உதவி கேட்டார் சேகரி வர்மன்.
போரில் வெற்றி பெற்ற ஹைதர் அலி, அந்தப் பகுதியைத் தானே கைப்பற்றிக்கொண்டார். அங்கிருந்த பழைய கோட்டையைப் புதுப்பித்து புதியக் கோட்டையை உருவாக்கினார்.
பிறகு, அவரது மகன் திப்பு சுல்தான் இந்தக் கோட்டையைப் பயன்படுத்தினார். தந்தை, மகன் இருவரும் கோட்டையைப் பயன்படுத்தி இருந்தாலும், ஒருவரின் பெயர் மட்டுமே இந்தக் கோட்டைக்கு நிலைத்தது. தவிரவும் கோட்டை அடிக்கடி ஆங்கிலேயர்களுக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே கைமாறிக் கொண்டிருந்தது.
இறுதியாக, ஒரு நாள், அதாவது 1790ஆம் ஆண்டு, ஆங்கிலேயப் படைகள் நிரந்தரமாகக் கோட்டையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. இப்போது, இந்தியத் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் கோட்டை உள்ளது. இந்தக் கோட்டைக்கு என்ன பெயர்
திப்பு சுல்தான் கோட்டை
ஹைதர் அலி கோட்டை
கர்னல் ஸ்வார்ட் கோட்டை
இந்த மூன்றில் எது?
விடைகள்: திப்பு சுல்தான் கோட்டை