sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வரலாற்று நாயகன்!

/

வரலாற்று நாயகன்!

வரலாற்று நாயகன்!

வரலாற்று நாயகன்!


PUBLISHED ON : அக் 09, 2017

Google News

PUBLISHED ON : அக் 09, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெயப்பிரகாஷ் நாராயண்

11.10.1902 - 8.8.1979

சிதாப்தியரா, பீகார்.


வரலாறு என்பது, வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்களை நினைவுபடுத்தும் காலப் பெட்டகமாக இருக்க வேண்டும். ஆனால், இந்திய வரலாறு, தன் பக்கங்களில் மறந்து போன ஒரு வரலாற்று நாயகன் இருக்கிறார். அவர் ஜே.பி. என்கிற ஜெயப்பிரகாஷ் நாராயண். ஜே.பி. எந்த வரலாற்று பாடப் புத்தககத்திலும் இருப்பதில்லை; அவரது பெயர் எங்கேயும் குறிப்பிடப்படுவதில்லை; அவரது பிறந்தநாளும் மறைந்தநாளும் கொண்டாடப்படுவதில்லை. இத்தனைக்கும் அவர் செல்வாக்கு அதிகம் பெற்ற தலைவர்.

ஜே.பி. தனது ஆரம்பக்கல்வியை சொந்த ஊரில் பயின்றார். சிறுவயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கி பரிசு பெற்ற கட்டுரை 'பீகாரில் தற்போது ஹிந்தியின் நிலைமை'. கல்வி உதவித் தொகையுடன் பாட்னா கல்லூரியில் சேர்ந்து, இரண்டாமாண்டு படித்தபோது அங்கிருந்து வெளியேறினார். அதற்குக் காரணம் அந்தக் கல்லூரி ஆங்கிலேயரின் நிதியுதவியால் நடத்தப்பட்டது. கடைசியாக பீகார் வித்யாபீடத்தில் சேர்ந்து கற்றார்.

தேச பக்தராகவும், தீவிர சுதேசியாகவும் இருந்ததால், கையால் நெய்த ஆடை, காலணிகளையே அணிந்தார். 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகி, சிறையில் இருந்து தப்பி, நேபாளம் சென்றார். ஜே.பி.யின் ஈடுபாடும் பற்றும் மார்க்சியக் கொள்கைகளில் இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகுகூட, அதிகாரம் தரும் பதவிகளை விரும்பவில்லை.

காந்திய வழியில் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். வேகமாக வளர்ந்த அந்த இயக்கம், 'முழுப்புரட்சி' என்று அழைக்கப்பட்டது. இவரது பலகட்ட எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல்தான், 1975ல் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார் என்றும் சொல்லப்பட்டது. இந்திராவின் தேர்தல் முறைகேடுகளையும், அதிகாரப் போக்கையும் கடுமையாக எதிர்த்தார். அதனால் பல எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஜே.பி.யும் கைதாகி சிறை சென்றார். அவர் நினைத்திருந்தால், மக்கள் புரட்சியை ஏற்படுத்தியிருக்க முடியும். இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்ற எல்லா வாய்ப்புகளும் அவரிடம் இருந்தன. ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் நினைக்காமல், நாட்டைப் பற்றி யோசித்தார் ஜே.பி.

ஜே.பி. சிறையில் இருந்தபோது, அவரைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த ஆட்சியர் (சண்டிகர்) தேவசகாயம் என்பவர்

JP in Jail என்கிற புத்தகத்தை எழுதினார். வரலாற்றில் தொலைந்துபோன ஜே.பி.யின் வாழ்க்கை அனுபவங்களை இன்றைய தலைமுறையாகிய நாம் கட்டாயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

விருதுகள்

பாரத ரத்னா (1999)

ரமோன் மகசேசே (1965)






      Dinamalar
      Follow us