sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : அக் 09, 2017

Google News

PUBLISHED ON : அக் 09, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்டோபர் 9, 1874: உலக அஞ்சல் நாள்

இ-மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் என்று தகவல்கள் பகிரப்பட்டாலும், கடிதம் அனுப்பிய காலத்தை மறக்க முடியாது. உலக தபால் யூனியன் ஆரம்பிக்கப்பட்ட தினத்தைக் கொண்டாட, இந்த நாள் அறிவிக்கப்பட்டது. இந்திய அஞ்சல் நாள் அக்டோபர் 10ல் கொண்டாடப்படுகிறது.

அக்டோபர் 10, 1906: ஆர்.கே. நாராயண் பிறந்த நாள்

தன் படைப்புகளின் மூலம், உலக அளவில் இந்திய இலக்கியத்துக்குப் புகழ் சேர்த்தார். நாவல்களில் இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், சமுதாயத்தின் நிலை என அனைத்தையும் பதிவு செய்தார். இவரது தம்பி கார்டூனிஸ்ட் ஆர்.கே. லஷ்மண்.

அக்டோபர் 11, 2011: சர்வதேச பெண் குழந்தைகள் நாள்

குழந்தைத் திருமணம், வன்கொடுமை போன்றவற்றால் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கல்வி, மருத்துவம், சட்ட உரிமை ஆகியவை மறுக்கப்படுகின்றன. பெண் குழந்தைகளுக்கு சமத்துவத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த, ஐ.நா. சபை இந்த நாளை அறிவித்தது.

அக்டோபர் 14, 1970: உலக தர நிர்ணய நாள்

உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. நுகர்வோருக்குத் தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அக்டோபர் 15, 2008: உலக கை கழுவும் நாள்

கைகளில் உள்ள கிருமிகளால் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். மாணவர்களிடம் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐ.நா.சபை இந்த நாளை அறிவித்தது.

அக்டோபர் 15, 1931: அப்துல் கலாம் பிறந்த நாள்

அறிவியலாளர்; இந்தியாவின் 11வது குடியரசு தலைவர். ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுபட்டதால் 'ஏவுகணை நாயகன்' என்று அறியப்படுகிறார். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.






      Dinamalar
      Follow us