sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/களத்தில் கணக்கு எவ்வளவு பணம்?

களத்தில் கணக்கு எவ்வளவு பணம்?

களத்தில் கணக்கு எவ்வளவு பணம்?


PUBLISHED ON : நவ 20, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருணும் வருணும் நண்பர்கள். இருவரிடமும் பணம் இருந்தது. அருண் வருணுக்கு 30 ரூபாய் கொடுத்தால், வருணிடம் அருணிடமுள்ள பணத்தைவிட இரு மடங்கு அதிகமாக இருக்கும்.

ஒருவேளை, வருண் அருணுக்கு 10 ரூபாய் கொடுத்தால், அருணிடம்

வருணிடமுள்ள பணத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

எனில், அவர்களிடம் எவ்வளவு பணம் இருந்திருக்கும்?

விடைகள்:

அருணிடம் 62 ரூபாய், வருணிடம் 34 ரூபாய்.

விளக்கம்: அருணிடம் இருந்த பணத்தை x என்க.

வருணிடம் இருந்த பணத்தை y என்க.

அருண் வருணுக்கு ரூ.30 கொடுத்தால், வருணிடம் அருணிடமுள்ள பணத்தை விட இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை 2(x-30) = y+30 என்று எழுதலாம்.

இதனை, 2x--60=y+30

2x--y=90 ...(i) எனலாம்.

ஒருவேளை, வருண் அருணுக்கு 10 ரூபாய் கொடுத்தால், அருணிடம் வருணிடமுள்ள பணத்தை விட மும்மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை x+10 = 3(y-10) என்று எழுதலாம்.

இதனை , x+10 = 3y-30

x = 3y-30--10

x= 3y-40 ...(2) எனலாம்.

சமன்பா டு (2)ஐ (1)இல் பிரதியிட்டால்,

2(3y-40)-y = 90

6y-80-y = 90

5y = 90+80

5y = 170

y= 34.

இந்த மதிப்பை (y=34) சமன்பாடு (2)இல் பிரதியிட்டால், x = 3(34)-40 = 102-40 = 62. எனவே, அருணிடம் 62 ரூபாயும், வருணிடம் 34 ரூபாயும் இருந்திருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us