
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை, அடுத்த எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது?
அ. நான்கு
ஆ. மூன்று
இ. ஐந்து
ஈ. ஒன்று
2. அமெரிக்க வாழ் இந்தியர்களான பல்குனி ஷா, கெள ரவ் ஷா இணைந்து உருவாக்கிய, பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ள சிறுதானியங்கள் தொடர்பான பாடல், எந்த விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது?
அ. கிராமி
ஆ. பாரத ரத்னா
இ. பத்மஸ்ரீ
ஈ. பத்மபூஷண்
3. சமூக நல்லிணக்கத்திற்கு கேடுவிளைவிப்பதாகக் கருதி, சீன நிறுவனத்தின் எந்தச் செயலிக்கு, நேபாளம் நாட்டு அரசு தடை விதித்துள்ளது?
அ. பேஸ்புக்
ஆ. டிவிட்டர்
இ. வீசாட்
ஈ. டிக் டாக்
4. தமிழகத்தில், வரும் 2024ஆம் ஆண்டில், எத்தனை இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, தமிழகத் தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது?
அ. 5
ஆ. 8
இ. 10
ஈ. 12
5. தமிழகத்தில், பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் குறைகள், புகார்களைத் தெரிவிக்க, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள, மூன்று இலக்க கட்டணம் இல்லா உதவி மைய எண்?
அ. 150
ஆ. 149
இ. 104
ஈ. 145
6. 2024ஆம் ஆண்டு ஜனவரியில், தமிழக அரசு நடத்த உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இதுவரை எத்தனை நாடுகள் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளன?
அ. எட்டு
ஆ. பத்து
இ. ஐந்து
ஈ. மூன்று
7. இந்தியாவில், சட்டசபை தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் மிகப் பெரியதும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படும் மாநிலம் எது?
அ. சட்டீஸ்கர்
ஆ. மத்திய பிரதேசம்
இ. ராஜஸ்தான்
ஈ. தெலங்கானா
8. உலகக் கோப்பை அரையிறுதியில், அதிக ரன் (117) விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளவர்?
அ. முகமது ஷமி
ஆ. ரோஹித் சர்மா
இ. விராட் கோலி
ஈ. ஷுப்மன் கில்
விடைகள்: 1. இ, 2. அ, 3. ஈ, 4. இ, 5. ஆ, 6. அ, 7. ஆ, 8. இ.