PUBLISHED ON : ஆக 15, 2016

ஒரு நாள் என்பது, 24 மணி நேரம்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சூரியக் குடும்பத்தில் பிற கோள்களுக்கு ஒரு நாள் என்பது 24 மணி நேரம் இல்லை. ஒரு கோள் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமே, அந்தக் கோளின் ஒரு நாள் எனப்படுகிறது. ஒவ்வொரு கோளும் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகிற நேரம் பற்றிய விவரத்தைப் பார்ப்போம்...
பூமி 24 மணி நேரம்
செவ்வாய் 25 மணி நேரம்
வியாழன் 10 மணி நேரம்
சனி 11 மணி நேரம்
யுரேனஸ் 17 மணி நேரம்
நெப்டியூன் 16 மணி நேரம்
புதன் 1,408 மணி நேரம்
வெள்ளி 5,832 மணி நேரம்
ஜாலியா ஒரு கணக்கு விளையாட்டு
பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம். ஒரு வருடம் என்பது 365 நாட்கள். ஒருவருடைய வயது என்பது பிறந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன என்பதை வைத்துக் கணக்கிடுகிறோம். அதேபோல வேறு கோள்களில் உங்களின் வயது என்னவாக இருக்கும்?! கண்டுபிடித்து மகிழுங்கள்!
