தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மொழி புரிய தடையில்லை!

மொழி புரிய தடையில்லை!

மொழி புரிய தடையில்லை!


PUBLISHED ON : ஆக 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொழிபெயர்ப்புத் துறையில் ஒரு சாதனைக் கண்டுபிடிப்பு 'பைலட் (Pilot)' என்ற கருவி. பல மொழிகளையும் மொழிபெயர்க்கும் தொழில்நுட்பம் கொண்ட இந்தக் கருவி, காதுகளில் பொருத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது எப்படிச் செயல்படுகிறது? ஸ்மார்ட் போன்களில் பைலட் கருவிக்கான செயலியை (App) தரவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். பைலட் கருவியும் ஸ்மார்ட் போனும் 'புளுடூத்' (Bluetooth) தொழில் நுட்பத்தில் இணைக்கப்படுகிறது. பைலட் கருவியில், ஒலியுணர் பகுதி (Speech Recognition), இயந்திர மொழிபெயர்ப்பு (Machine Translation). பேச்சுத் தொகுப்பு (Speech Synthesis) என மூன்று பகுதிகள் உண்டு. போனில் ஒருவர் பேசப் பேச, சற்று நேரத்தில் எந்த மொழியில் கேட்க விரும்புகிறோமோ அது ஒலி வடிவில் கேட்கிறது. இந்தக் கருவியை நியூயார்க்கை சேர்ந்த 'வேவர்லி லேப்ஸ்' (Waverly Labs) நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. தற்போது ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளை மொழி பெயர்க்கிறது. ஹிந்தி, அரபி உள்ளிட்ட மேலும் சில மொழிகளை விரைவில் பைலட் மொழி பெயர்ப்பில் கேட்க முடியுமாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us