தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வேட்டையாடிகள் இப்போது பாதுகாவலர்கள்

வேட்டையாடிகள் இப்போது பாதுகாவலர்கள்

வேட்டையாடிகள் இப்போது பாதுகாவலர்கள்


PUBLISHED ON : அக் 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கென்யா நாட்டில் 'மாசாய்' (Maasai) என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பாரம்பரியமாக தங்களது வீரத்தை வெளிக்காட்ட, சிங்கங்களை வேட்டையாடுவார்கள். அவர்களுடைய கால்நடைகள் சிங்கங்களுக்கு உணவாகிவிடுவதைத் தடுக்கவும், சிங்க வேட்டையைக் குல வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வேட்டையாடிகளாக இருந்தவர்கள், இப்போது பாதுகாவலர்களாக மாறி இருக்கின்றனர். வனவிலங்குகளைப் பாதுகாக்கும் அமைப்புகள், சிங்கங்களைக் கண்டறிந்து தகவல் சொல்லும் பணியில் இந்தப் பழங்குடியினரை ஈடுபடுத்தி வருகின்றன. சிங்கங்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட செல்போன்கள் மூலம் உடனுக்குடன் தகவல்களை இவர்கள் அனுப்புகின்றனர். இதனால், சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் பணியில் ஈடுபடுவதற்கு ஊக்கப் பரிசாக, கால்நடைகள் வழங்கப்படுகின்றன. சிங்கங்களை வேட்டையாடுவதை நிறுத்தி, அவற்றின் பாதுகாவலர்களாக மாறி இருப்பதால், தற்போது கென்ய சமூகத்தில் மாசாய் பழங்குடியினரின் மதிப்பு உயர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us