தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எதிர்பார்ப்பு இல்லாமல் விளையாடுவேன்!

எதிர்பார்ப்பு இல்லாமல் விளையாடுவேன்!

எதிர்பார்ப்பு இல்லாமல் விளையாடுவேன்!


PUBLISHED ON : ஜூலை 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஸ் உலகை ஆள இன்னொரு தமிழன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறது தமிழகம். ஆசியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா. இத்தாலியில் நடந்த கிரெடின் ஓப்பன் செஸ் தொடரில், இந்தச் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ள பிரக்ஞானந்தா பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

அடுத்த வெளிநாட்டுப் போட்டிக்கான தயாரிப்பில் மும்முரமாக இருந்த அவரை, பட்டம் இதழுக்காக சந்தித்துப் பேசினோம்.

செஸ் மீதான ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

செஸ் மீதான ஆர்வம், என் அக்கா வைஷாலியிடம் இருந்துதான் ஏற்பட்டது. அவர், நன்றாக செஸ் ஆடுவார். நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். எனக்கு மூன்று வயதாக இருக்கும்போதே அக்காவுடன் செஸ் ஆடத் தொடங்கிவிட்டேன். அக்காவிடம் செஸ் விளையாட்டைக் கற்றுக்கொண்டேன். எனது 5-வது வயதில் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.

போட்டிகள் குறித்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள்...

செஸ் போட்டிக்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளேன். மாநில, தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். மூன்று முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளேன். தற்போது கிராண்ட் மாஸ்டர் பட்டம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது வெற்றிக்கு உதவிவரும், என் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், நான் பயிலும் முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரிய வீரர்களுடன் விளையாடும்போது பயம் வருமா?

பயம் எதுவும் ஏற்படாது. எப்போதும் போல சாதாரணமாகத்தான் ஆடுவேன்.

நீங்கள் வெற்றிபெறும் போதெல்லாம், எதிர்பார்ப்புக் கூடும். இதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?

உலக சாம்பியன் ஆக வேண்டும் என்று விரும்பியுள்ளேன். கிராண்ட் மாஸ்டருக்காக 2,500 புள்ளிகளை எட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போதும்கூட, என்னுடைய செஸ் ரேட்டிங்கை, இன்னும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

ஆனால், விளையாடும்போது இதெல்லாம் என் கவனத்தில் இருக்காது. அதையே மனத்தில் வைத்தால் தேவையில்லாத அழுத்தம் உண்டாகும். ஒவ்வொரு போட்டியையும் சாதாரணமாகவே விளையாடுவேன். பிறரின் எதிர்பார்ப்பை என் மனதுக்குள் ஏற்றி, அதை நிறைவேற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆட மாட்டேன்.

உங்கள் ரோல் மாடல் யார்?

என் ரோல் மாடல் விஸ்வநாதன் ஆனந்த். அவரைப்போல் ஒரு செஸ் வீரராக வரவேண்டும் என்பதே என் ஆசை. அவருடனும், ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனுடனும் செஸ் விளையாட வேண்டும்.

ஒவ்வொரு வெற்றியையும் எப்படிக் கொண்டாடுவீர்கள்?

அப்பா, அம்மாவுடன் கோவிலுக்குச் செல்வேன்; பாட்டி வீட்டுக்குப் போவேன்.

வேறு பொழுதுபோக்குகள்?

சைக்ளிங் போவது மிகவும் பிடிக்கும். செஸ் பயிற்சி நிறுவனத்திலேயே, கொஞ்ச நேரம் டென்னிஸ் ஆடுவேன்.

பிரக்ஞானந்தா பற்றி அவரது பயிற்சியாளர் கூறும்போது...

பிரக்ஞானந்தா தன் வயதை ஒத்த பிள்ளைகளுடன் செஸ் விளையாடுவது அரிது. தன்னைவிட பெரிய வயதுடையவர்களுடன் செஸ் ஆடுவதை அவர் இயல்பாக விரும்பினார். திறமைமிக்கவர்களுடன் ஆடி அவர்களை வீழ்த்துவது பிரக்ஞானந்தாவுக்குப் பிடிக்கும். எப்போதும், செஸ் விளையாட்டை பற்றித்தான் அவரது சிந்தனை எல்லாம். கிராண்ட் மாஸ்டராகி எங்களுக்குப் பெருமையைத் தேடிக் கொடுத்துவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us