PUBLISHED ON : அக் 13, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினம் 'சிசிலிடே' (Sicilidae). இவை 'சிசிலியன்' (Sicilian) என்னும் புழுக் குடும்பத்தைச் சேர்ந்தவை. கடலுக்கு அருகாமையில் உள்ள ஈரப்பதமான மணற்பரப்புகளில் வாழும் இந்த உயிரினத்தின் உட்புற, வெளிப்புற உடல் அமைப்பு மணற்பரப்பிற்கு உள்ளேயே வாழும் வகையில் அமைந்துள்ளது. மணற்பரப்புக்குக் கீழே முட்டையிட்டு, அதை தனது உடலால் சுற்றி வளைத்து இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை அடை காக்கும். இந்தப் புழு மூன்று அடி நீளம் வரை வளரும். இதன் உடலில் இருந்து வரும் செரிமானக் கழிவு மண்ணை வளப்படுத்தி சூழலைக் காக்க உதவுகிறது. தில்லி பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் இந்த புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

