நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குக்காக உங்களுக்கு நீங்களே தேர்வு வைத்துக்கொள்ளுங்கள். தேர்வுதான், ஆனால் இது ஜாலியான தேர்வு. தமிழ்ச் சொற்கள் எந்த அளவுக்கு உங்களுக்குத் தெரியும் என்று சோதிக்கும் தேர்வு இது. இப்போது உங்களுக்கு விடுமுறைதானே... விளையாட்டாக இதைச் செய்து பார்க்கலாம். கூடச் சேர்ந்து விளையாடப் பெரியவர்களையும் அழைத்துக்கொள்ளலாம். குறிப்புகளை வைத்து, காலி இடங்களை நிரப்பி சொற்களை முழுமை ஆக்குங்கள்.
1. மேடை - அர________
2. ஆள்பவன் - அர________
3. பெருமாளிகை - அர________
4. ராட்சதன் - அர________
5. பாம்பு - அர________
6. வெட்டிப்பேச்சு - அர________
7. புலம்புதல் - அர________
விடைகள்:
1. அரங்கம்
2. அரசன்
3. அரண்மனை
4. அரக்கன்
5. அரவம்
6. அரட்டை
7. அரற்றுதல்