தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்த வார முக்கிய தினங்கள்

இந்த வார முக்கிய தினங்கள்

இந்த வார முக்கிய தினங்கள்


PUBLISHED ON : மார் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக பொம்மலாட்ட தினம் - மார்ச் 21: பொம்மைகளில் நூலைக் கட்டித் திரைக்குப் பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலை 'பொம்மலாட்டம்'. கூத்து வகையைச் சேர்ந்த இந்தக் கலை, நமது பழமையான மரபு வழிக் கலைகளில் ஒன்று.

உலக காடுகள் தினம்- மார்ச் 21: உலகின் இயற்கையைப் பாதுகாப்பதில் காடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகளையும், வன வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும் விதமாக 'உலக காடுகள் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக கவிதைகள் தினம் - மார்ச் 21: நாட்டின் சுதந்திரத்திற்கும் புரட்சிக்கும் எழுச்சிமிக்க கவிதைகள் காரணமாக இருந்திருக்கின்றன. கவிதைகளைக் கொண்டாடுவதற்காக 'யுனெஸ்கோ' (UNESCO -- The United Nations Educational, Scientific and Cultural Organization) அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது.

மார்ச் - 24 உலக காசநோய் தினம்: காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்ட் கோச் (Robert Koch) என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கண்டுபிடித்தார். இது ஓர் உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயைக் கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 1992ஆம் ஆண்டுமுதல் 'உலக காச நோய் தினம்' உலக சுகாதார அமைப்பால் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக நாடக தினம் - மார்ச் 27: சர்வதேச அளவில் நாடகத்தில் ஈடுபாடு கொண்ட நாடகச் செயல்பாட்டாளர்களால் கொண்டாடப்படுகிறது. நாடகப்பள்ளிகள், நிகழ்கலை சார்ந்த நிறுவனங்கள், நாடகக் குழுக்கள், தனித்த நாடகக் கலைஞர்களுக்கு என அனைவராலும் இந்த நாடக தினம் கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us