தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்த வார முக்கிய தினங்கள்

இந்த வார முக்கிய தினங்கள்

இந்த வார முக்கிய தினங்கள்


PUBLISHED ON : ஏப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

04.04.1855 கேரள மாநிலம் ஆலப்புழா என்னும் ஊரில் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்தார். இவர் இயற்றிய 'மனோன்மணீயம்' நாடகத்தில் இடம்பெற்ற 'நீராருங் கடலுடுத்த' என்ற பாடல்தான் தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக இருக்கிறது.

05.04.1908 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஜெகஜீவன்ராம், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், துணைப் பிரதமர் என, பல பதவிகளை வகித்தவர். பீகார் மாநிலத்தில், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் பிறந்தார்.

06.04.1992 சிறு வயதிலேயே அறிவியல் புனைகதைகளைப் படிக்கத் தொடங்கினார். இவரது கதைத் தொகுப்பு 'ஐ ரோபோ' 1950ல் வெளிவந்தது. அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர்களின் முன்னோடி ஐசக் அசிமோவ் இறந்தார்.

06.04.1938 தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர். இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவரான கோ. நம்மாழ்வார் தஞ்சாவூர், திருக்காட்டுப் பள்ளிக்கு அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்தார்.

07.04.1947 கார் என்றதும் நினைவுக்கு வருபவர். அமெரிக்காவில் கார் உற்பத்தியில் மிகப்பெரிய முன்னோடி. போக்குவரத்து துறையில் பெரும் புரட்சியை உருவாக்கி, பெரும் தொழிலதிபராக வளர்ந்த ஹென்றி ஃபோர்ட் இறந்தார்.

10.04.1912 உலகின் மிகப் பெரிய ஆடம்பர பயணிகள் கப்பல். தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து ஆரம்பித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us