தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இலைகள் போடும் ஆட்டம்!

இலைகள் போடும் ஆட்டம்!

இலைகள் போடும் ஆட்டம்!


PUBLISHED ON : ஏப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

இலையுதிர் காலம் (ஆட்டம் - Autumn) என்பது நான்கு பருவ காலங்களில் ஒன்று. கோடைக் காலம் முடிந்ததும் இலையுதிர்காலம் தொடங்கும். வழக்கமாக தென் கோளப் பகுதியில் மார்ச் மாதத்திலும்; வட கோளப் பகுதியில் செப்டம்பர் மாதத்திலும் இலையுதிர்காலம் ஆரம்பிக்கும்.

இலை உதிர்தல்: விதையில் இருந்து முதலில் தோன்றுவது தளிர் அல்லது இலைப் பகுதி. தாவரத்துக்குத் தாவரம், நிறத்திலும் வடிவத்திலும் இலைகள் மாறுபடும்.

கடுங்குளிர் காலத்தில், வேர்களின் திறன் குறைந்து காணப்படும். இதனால், தாவரங்களுக்குத் தண்ணீர் கிடைப்பதும் குறையும். இந்தத் தண்ணீர் இழப்பைக் குறைக்கவே இலைகளை உதிர்க்கின்றன. மெல்லிய இலைகளுக்குத்தான் அதிகமான தண்ணீர்த் தேவை இருக்கும். எனவே, அந்த இலைகளே இலையுதிர் காலத்தில் உதிர்கின்றன.

எல்லா மரங்களும் இலைகளை உதிர்ப்பதில்லை. வருடம் முழுவதும் இலைகளுடன் இருக்கும் மரங்கள் 'பசுமை மரங்கள்' எனப்படும். 'பைன்' மர இலைகள் ஒன்பது ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஆனால், ரோடோடெண்ட்ரான் (Rhododendron) வகை மர இலைகள் வாழும் காலம் 6 மாதங்கள்தான்!

* ஆட்டம் (Autumn) என்பது, லத்தீன் வார்த்தை 'ஆட்டம்னஸ்' என்பதில் இருந்து பிறந்தது.

* இந்தப் பருவத்தை 16ஆம் நூற்றாண்டிற்கு முன் 'ஹார்வெஸ்ட்' என்று அழைத்தார்கள்.

* ஃபால் (Fall) என்ற வார்த்தையும் பயன்பாட்டில் இருந்தது. இதற்கு 'உயரத்தில் இருந்து விழுவது' என்று அர்த்தம்.

* இலையுதிர் காலம் பற்றி அகநானூறு 229ஆவது பாடலில் வருகிறது.

* இலையுதிர் காலம் தமிழில் இளவேனிற்காலம் என்றும், சமஸ்கிருதத்தில் வசந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

இலையுதிர் மரங்கள் அதிகம் காணப்படும் முக்கியமான நாடுகள்:

* கனடா

* அமெரிக்கா

* கிழக்கு ஆசியா (சீனா, கொரியா, ஜப்பான்)

* ஐரோப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us