PUBLISHED ON : ஜூன் 27, 2016

30.06.1966: குத்துச் சண்டையில் வெற்றிகரமான ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்தார். இளம் வெடி, இரும்பு மைக் என்ற புனைப்பெயர்களைக் கொண்டிருந்த இரும்பு மனிதன், மைக்கேல் ஜெரார்டு டைசன் பிறந்த தினம்.
30.06.1985: ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே அதிக பதக்கங்களை பெற்று வரலாறு படைத்த அமெரிக்க நீச்சல் வீரர். சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளிலும் பல சாதனைகளைப் படைத்துள்ள மைக்கேல் பெல்ப்ஸ் பிறந்த தினம்.
03.07.1917: பால கங்காதர திலகர், காந்தி உட்பட முன்னணித் தலைவர்கள் பலர் தங்களுக்கு வழிகாட்டியாக இவரைக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தியாவின் அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த, 'இந்தியப் பெருங்கிழவர்' என அழைக்கப்பட்ட தாதாபாய் நவுரோஜி மறைந்த தினம்
03.07.1883: இவரது படைப்புகள் முக்கியம் வாய்ந்தவையாகத் திகழ்ந்தன. ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். 20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஐரோப்பிய எழுத்தாளரான பிரான்ஸ் காஃப்கா பிறந்த தினம்
