PUBLISHED ON : ஜூன் 27, 2016

பெய்தாலும் பேச வைக்கும். பொய்தாலும் பேச வைக்கும். அதுதான் மழை. இந்த வெயிலுக்குக் குளிர்ச்சியாக ஒரு சந்தப்பாட்டு உங்களுக்காக... இப்போது உங்கள் ஊரில் மழை பெய்தால், வெளியில் நீங்கள் பார்க்கும் காட்சியையும் இந்தப் பாட்டின் வரிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வாய்ப்பு!
மழைவரும் போல
மேகங்கள் சூழ
வானம் மிரட்டியது
கறுப்பு மேகம்
சறுக்கிப் போக
காற்று விரட்டியது
'ஹோ' என்ற இசையை
பேய்க் குரல் காற்று
சங்காய் ஊதியது
பயந்த முகிலினம்
ஒன்றோடொன்றாய்
தனக்குள் மோதியது
மேக்ஙகள் உரசி
தீப்பிடித்தது போல்
மின்னல் தோன்றியது
வளைந்து நெளிந்து
வௌ்ளிக் கோல்களை
வானில் ஊன்றியது
நீலத் திரையில்
வௌ்ளைக் கோடுகள்
ஓவியம் தீட்டியது
சித்திரம் முடிந்த
பின்னே இடிதான்
அச்சம் காட்டியது
காற்று குளிர்ந்து
சில்லென்றாகி
மேகம் நடுங்கியது
வானம் கிழிந்த
மழையால்,
குளிரால்
உலகம் ஒடுங்கியது
பூமியில் உயிர்கள்
பிழைக்க மேகம்
மழையாய்ப்
பெய்கிறது
அதற்குள் இடியும்
மின்னலுமாய் ஏன்
குறும்பு செய்கிறது?
- ரமேச்சு
