தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்


PUBLISHED ON : ஜூன் 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கர்: நீ பிராக்டிஸ் பண்றதப் பார்த்தா பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு ரெடி ஆகுறபோல?

முன்னா: கொஞ்சம் ஓடினதுக்கே மூச்சு வாங்குது. இந்த குண்டு உடம்பை வச்சு நான் எங்க ஒலிம்பிக்ல விளையாடுறது?

ச: ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் ஆரம்பிச்ச ஒலிம்பிக்ல கலந்துக்குறதுனா சும்மா இல்ல.

மு: நீ சொல்றத கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் 27 நூற்றாண்டுக்கு முன்னாலயே ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிச்சுருச்சா?

ச: கிரேக்கர்கள் கடவுளை வழிபடும் திருவிழாக் காலங்களில் போட்டிகள நடத்திருக்காங்க. அதுதான் ஒலிம்பிக்!

மு: தாத்தா ஊர்ல நடந்த திருவிழாவிலகூட, உறி அடிக்கிறது, கயிறு இழுக்கிறதுன்னு போட்டிகள் வச்சாங்க. இதெல்லாம் ஒலிம்பிக்ல சேருமா?

ச: அப்படிலாம் இல்ல. பல நாடுகள் கலந்துகிட்டு விளையாடுவாங்க.

மு: எல்லா நாடுகளும் அடிச்சுக்காம விளையாடினா சந்தோஷம்தான். அப்படின்னா நான் ஓட வாய்ப்பே இல்லையாடா?

ச: மாரத்தான் ஓடலாமே. மாரத்தான் என்ற இடத்திலிருந்து ஏதென்ஸ் நகருக்கு 25மைல் ஓடி, வெற்றிச் செய்தியைச் சேர்த்த கிரேக்க போர்வீரனின் நினைவாக வந்த போட்டி அது.

மு: அதுபோதும். நான் ஜெயிச்சா எனக்கும் ஆலிவ் இலைகளால கிரீடம் அணிவிச்சு எல்லாரும் 'ஹீரோ'ன்னு சொல்லுவீங்கதான?

ச: இப்போதான் எல்லாம் மாறிடுச்சே. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டி, புதிய விளையாட்டுகள், விதிமுறைகள், ஐந்து நிற ஒலிம்பிக் வளையங்கள் என பல மாற்றங்கள்.

மு: ஒலிம்பிக் வளையம்னா வளையத்துக்குள்ள நெருப்பு வச்சு தாண்டுற விளையாட்டுதான. ரொம்பக் கஷ்டமா இருக்குமே?

ச: விளையாட்டு இல்லடா அது. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானி, அமெரிக்கா ஆகிய நாடுகளைக் குறிக்குது அந்த வளையம்.

மு: எல்லாம் சரி. ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுதே. உன் பேச்சுல ஃபயர் கொஞ்சம் கம்மியா இருக்கே.

ச: ஆமால்ல! பழங்கால மற்றும் நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடர்பை உணர்த்தும் ஜோதியாக ஒலிம்பிக் தீபம் இருக்கிறது.

மு: நீ நெஜமாவே ஷார்ப்புடா சங்கர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us